புளி சட்னி
காரமான புளிப்பான புளி சட்னி பல வித பலகாரத்திற்கு சைடு டிஷ் ஆகும்.
Posted by
ShareRecipes Staff
14/03/2014
Click to rate this post!
[Total: 1 Average: 5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 5-6
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»கூடுதல் உணவு»
குறிச்சொற்கள் :
Chutney
பிரதான மூலப்பொருள் :
காய்கறி
செய்முறை வகை :
இரவு உணவு சுவைச்சாறு(sauce) / சட்னி
தேவையான பொருட்கள் :
- நறுக்கிய கொத்தமல்லி இலை – 3 மேசைக்கரண்டி
- நறுக்கிய புதினா – 3 மேசைக்கரண்டி
- நறுக்கிய கறிவேப்பிலை – 1 மேசைக்கரண்டி ( விரும்பினால் )
- துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி
- புளி – 1"அளவு உருண்டை
- வெங்காயம் – ½ நடுத்தர அளவு அல்லது சின்ன வெங்காயம் - 10
- பூண்டு – 1 பல்லு
- பச்சை மிளகாய் – 1 மிதமான காரத்துக்கு அல்லது 2 அதிக காரத்துக்கு
- எண்ணெய் – 1 தேக்கரண்டி
- உப்பு – சுவைக்கேற்ப
- தண்ணீர் – தேவைக்கேற்ப
முறை :
- கொத்தமல்லி இலை, புதினா, கறிவேப்பிலை, மிளகாய் மற்றும் வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும்
- பூண்டை உரித்துக்கொள்ளவும். தேங்காயை துருவிக்கொள்ளவும்.
- புளியைக் கழுவி 1 மேசைக்கரண்டி தண்ணீரில் ஊற வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, துருவிய தேங்காயை 1-2 நிமிடங்கள் வறுக்கவும்.
- கொத்தமல்லி இலை, புதினா, கறிவேப்பிலை, மிளகாய், வெங்காயம், பூண்டு, புளி மற்றும் புளித் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து 1-2 நிமிடங்கள் அரைக்கவும்.
- அதில் வெங்காயம், வருத்த தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் அரைக்கவும். தேவைப்பட்டால் 1 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
- புளி சட்னி தயார்.
குறிப்புகள் : புளிக்கு பதிலாக ஆம்ச்சூர் ( மாங்காய் ) பொடி / 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம். இது, சமோசா, கஞ்சி சோறு மற்றும் நோன்பு கஞ்சிக்கு நல்ல சைடு டிஷ் ஆகும்.
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு