சிக்கன் மஞ்சுரியன்
சிக்கன் மஞ்சுரியன் இந்தோ-சைனீஸ் முறையில் செய்யப்படும் சுவையான உணவு.
Posted by
ShareRecipes Staff
15/05/2014
Click to rate this post!
[Total: 2 Average: 5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
மரினேஷன் நேரம் :2-3 மணி நேரம்
சமைக்கும் நேரம் : 20-30 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 5-6 ஆட்கள்
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
Chicken, Indo-chinese
பிரதான மூலப்பொருள் :
கோழி இறைச்சி
தேவையான பொருட்கள் :
- எலும்பில்லாத சிக்கன் – 500 கிராம்
- குடை மிளகாய் – 1
- வெங்காயம் பெரியது - 1
- பச்சை மிளகாய் – 4-5
- இஞ்சி – 1” நீள மற்றும் 1” அகல துண்டு
- பூண்டு – 2 பல்லு
- இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
- தக்காளி கூழ் – 4 மேசைக்கரண்டி அல்லது
- தக்காளி சாஸ் – 6 மேசைக்கரண்டி அல்லது
- தக்காளி - 3
- சிக்கன் ஸ்டாக் அல்லது தண்ணீர்– 200 மில்லி
- கார்ன் ப்ளோர் மாவு – 4 மேசைக்கரண்டி
- மைதா மாவு – 4 மேசைக்கரண்டி
- டார்க் சோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி
- லைட் சோயா சாஸ் – 4 மேசைக்கரண்டி
- முட்டை – 2
- அஜினோமோட்டோ – சிறிதளவு (விரும்பினால்)
- நறுக்கிய கொத்தமல்லி இலை – 1 தேக்கரண்டி
- எண்ணெய் – 25௦-3௦௦ மில்லி வறுக்க
- தண்ணீர் – தேவைக்கேற்ப
முறை :
- கார்ன் ப்ளோர் மாவு, மைதா மாவு, டார்க் சோயா சாஸ், முட்டை, மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து மாரினேட் செய்யவும். அஜினோமோட்டோ சேர்க்க விரும்பினால் இதில் சேர்க்கவும்.
- சிக்கன் துண்டுகளை 2 மணி நேரம் மாரினேட்டில் ஊற வைக்கவும்.
- மிதமான சூட்டில் கடாயை சூடாக்கி 1 மேசைக்கரண்டி எண்ணெய் தவிர மீதமுள்ள எண்ணெய்யை சேர்க்கவும்.
- சிக்கன் துண்டுகளை பொரித்து தனியாக வைக்கவும்.
- அனைத்து துண்டுகளையும் பொரித்த பின் மாரினேட்டை தனியாக வைக்கவும்.
- வெங்காயம், மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்; குடை மிளகாயை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்; இஞ்சி மற்றும் பூண்டை துருவிக் கொள்ளவும்.
- தனியாக ஒரு கடாயை சூடாக்கி 1 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
- நறுக்கிய வெங்காயம், மிளகாய், துருவிய இஞ்சி, பூண்டு, குடை மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் சமைக்கவும்.
- தக்காளி கூழ் அல்லது தக்காளி சாஸ் அல்லது அரைத்த தக்காளி , சோயா சாஸ் மற்றும் சிக்கன் stock அல்லது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். சாசை சுவைத்து பின்பு உப்பு சேர்ப்பதை பற்றி முடி வெடுக்கவும்.
- மாரினேட் மற்றும் சமைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடங்கள் சமைக்கவும்.
- கொத்தமல்லி இலையால் அலங்கரிக்கவும்.
- சிக்கன் மஞ்சுரியன் சாப்பிடத் தயார்
குறிப்புகள் : சாதம்/ சப்பாத்தி அல்லது கோதுமை/மைதா தோசையுடன் சாப்பிட ஏற்றது.
மற்ற பெயர்கள் : Chicken Manchurian, Manchurian chicken
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு