சிக்கன் சூப்
மசாலா சுவைமிக்க சிக்கன் சூப் ஜலதோசம் பிடித்தவருக்கு மூக்கு மற்றும் நெஞ்சு சளியை சுத்தம் செய்ய உதவும். பசி உண்டாக்கவும் செய்யும்.
Posted by
ShareRecipes Staff
29/04/2014
Click to rate this post!
[Total: 3 Average: 4]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»பசி தூண்டி»
குறிச்சொற்கள் :
Chicken
பிரதான மூலப்பொருள் :
கோழி இறைச்சி
செய்முறை வகை :
இரவு உணவு மதிய உணவு ரசம்(soup)
தேவையான பொருட்கள் :
- எலும்புடன் கூடிய சிக்கன் – 5௦௦ கிராம்
- வெங்காயம் – 150 கிராம்
- தக்காளி – 1 சிறியது
- பச்சை மிளகாய் – 1-2
- இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
- ஜீரகம் – 3/4 தேக்கரண்டி
- மிளகு – 3/4 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
- மிளகு தூள் – 3/4 தேக்கரண்டி
- எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
- தண்ணீர் – தேவைக்கேற்ப
- உப்பு – சுவைக்கேற்ப
- நறுக்கிய கொத்தமல்லி இலை – 2 மேசைக்கரண்டி
முறை :
- வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக்கொள்ளவும்.
- மிளகாய் நுணுக்கிக்கொள்ளவும். கறியை கழுவி சுத்தம் செய்யவும்.
- 3-4 லிட்டர் பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானதும் ஜீரகம் மற்றும் நுணுக்கிய மிளகாய் சேர்த்து ½ நிமிடம் வறுக்கவும்.
- நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயுடன் சேர்த்து 3-4 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைக்கவும்.
- மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும்.
- மசாலா தூள்கள், தக்காளி, பாதியளவு நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் சிக்கன் துண்டுகள் சேர்த்து 3-4 நிமிடங்கள் வறுக்கவும்.
- 5௦௦ மில்லி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
- குக்கரை மூடி வைத்து ஒரு விசில் வரும் வரை மிதமான சூட்டில் சிக்கனை சமைக்கவும்.
- முதல் விசில் வந்தவுடன், தீயைக் குறைத்து 5 நிமிடங்கள் வைக்கவும்.
- அடுப்பை நிறுத்தி விட்டு பிரஷர் அடங்கியவுடன் மூடியைத் திறக்கவும்.
- மீதமுள்ள கொத்தமல்லி இலைக் கொண்டு அலங்கரிக்கவும்.
குறிப்புகள் : சிக்கனின் தொடை மற்றும் இறகு மென்மையாக இருப்பதால் சூப்பிற்கு பொருந்தும். மாற்றத்திற்கு, முயற்சிக்கவும், மட்டன் சூப். கவனிக்கசமையல் எச்சரிக்கைசமையல் நேர மாற்றங்கள் குறித்தவைக்கு.
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு