தேங்காய் பால் மீன் குழம்பு

தேங்காய் பால் மீன் குழம்பு என்பது தேங்காய் பால் குழம்பில் மீன் சேர்த்து செய்யப்படும் சுவையான குழம்பாகும்.

Posted by ShareRecipes Staff
29/04/2014

Click to rate this post!
[Total: 2 Average: 4]
Please rate it

தயாரிப்பு நேரம் : 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்

சேவை செய்கிறது : 4-5

செய்முறை புகைப்படத்தைப் பதிவேற்றுக

குறிச்சொற்கள் : ,

பிரதான மூலப்பொருள் : மீன்
செய்முறை வகை : மதிய உணவு

தேவையான பொருட்கள் :

 

  • வெள்ளை மீன் – 5௦௦ கிராம்
  • எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
  • பட்டை – 4 cm நீள துண்டு
  • கிராம்பு – 4
  • ஏலக்காய் – 1 (விரும்பினால்)
  • வெங்காயம் – 2 சிறியது
  • பச்சை மிளகாய் – 3-4
  • இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
  • சீரகத் தூள் – 1 தேக்கரண்டி
  • டின் தேங்காய் பால் – 7 மேசைக்கரண்டி அல்லது 35௦ மில்லி வீட்டில் செய்த தேங்காய் பால்
  • எலுமிச்சை சாறு – 2 மேசைக்கரண்டி
  • நறுக்கிய கொத்தமல்லி இலை – 1 தேக்கரண்டி அலங்கரிக்க
  • தண்ணீர் – தேவைக்கேற்ப
  • உப்பு – சுவைக்கேற்ப

முறை :
  1. வெங்காயம் மற்றும் கொத்‌தமல்லி இலைகளை நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை வெட்டிக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயை சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும்.
  3. எண்ணெய் சூடானதும், பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து ½ நிமிடம் வறுக்கவும்.
  4. நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை கலக்கவும்.
  5. மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடங்கள் வறுக்கவும்.
  6. மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் சோம்பு தூள் சேர்த்து 1 நிமிடம் கலக்கவும்.
  7. உப்பு, 2 கப் தண்ணீர், தேங்காய் பால் சேர்க்கவும். வீட்டில் தயாரித்த தேங்காய் பால் சேர்த்தால் தண்ணீரின் அளவைக் குறைத்துக் கொள்ளவும்.
  8. எலுமிச்சை சாறு சேர்த்து மூடி வைத்து 4-5 நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
  9. மீன் சேர்த்து 3-4 நிமிடங்கள் சமைக்கவும்.
  10. கொத்தமல்லி இலை கொண்டு அலங்கரிக்கவும்.
  11. தேங்காய் பால் மீன் குழம்பு பரிமாறத் தயார்.

குறிப்புகள் : சாதம்/சப்பாத்தி/ பரோட்டா அல்லது கோதுமை/மைதா தோசை ஆகியவற்றுக்கு பொருந்தும்.


 

இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.




 

அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (178)

By continuing to use the site, you agree to the use of cookies. more information

The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

Close