கொத்து பருப்பு
கொத்து பருப்பு, தமிழகத்தின் தென்னகரங்களில் விசேஷ தினங்களில் அல்லது விருந்தினர்களுக்கு செய்யப்படும் சுலபமான குழம்பு.
Posted by
ShareRecipes Staff
12/05/2014
Click to rate this post!
[Total: 3 Average: 3.7]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
Dhal, Egg, Muslim Meal
பிரதான மூலப்பொருள் :
பருப்பு / கடலை முட்டை
செய்முறை வகை :
மதிய உணவு விருந்து உணவு
தேவையான பொருட்கள் :
- துவரம் பருப்பு – 150 கிராம் அல்லது 25௦ மில்லி டீகப்பில் 2/3 அளவு
- வெங்காயம் – 150 கிராம்
- தக்காளி – 1
- மிளகாய் – 2
- இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- முட்டை – 3
மசாலாத் தூள்:
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- சோம்பு/பெருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- ஜீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி
முறை :
- துவரம் பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வைத்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- வெங்காயத்தை நீளமான துண்டுகளாகவும், தக்காளி மற்றும் மிளகாயை சிறிய துண்டுகளாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
- 3லிட்டர் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது மற்றும் மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
- ஜீரகத் தூள் மற்றும் மஞ்சள் தூள் தவிர அனைத்து மசாலாத் தூள்களும் சேர்த்து வதக்கவும்.
- 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- சீரகத் தூள், உப்பு மற்றும் பருப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
- ஒவ்வொரு முட்டையாக உடைத்து கடாயில் ஊற்றவும்; முட்டை வேகும் வரை சில நிமிடங்கள் மூடி வைக்கவும்.
குறிப்புகள் : இதை நெய் சாதத்துடன் சாப்பிடலாம்.
மற்ற பெயர்கள் : Kothu Paruppu
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு