சிக்கன் ரோல்
இதை லஞ்ச் பாக்ஸ் உணவு அல்லது லீவு நாட்களில் ஸ்பெஷல் உணவாக சமைக்கலாம்.
Posted by
ShareRecipes Staff
01/05/2014
Click to rate this post!
[Total: 2 Average: 4]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 30-45 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 30-45 நிமிடங்கள்
செய்கிறது : 8 -10
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
packed lunch, tiffin
பிரதான மூலப்பொருள் :
கோழி இறைச்சி
தேவையான பொருட்கள் :
ஸ்டஃப்பிங்கு தேவையான பொருட்கள்:
- எலும்பில்லா சிக்கன் – 75௦ கிராம்
- வெங்காயம் – 450 கிராம்
- தக்காளி – 1
- குடை மிளகாய் – 1
- இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
- எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
- நறுக்கிய கொத்தமல்லி இலை – 1 மேசைக்கரண்டி
- முட்டை – 2
- எண்ணெய் வறுக்க
மசாலா தூள்கள்:
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் –1 அல்லது 2 தேக்கரண்டி
- கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
- மல்லித் தூள் – 1 தேக்கரண்டி
- மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
மைதா சப்பாத்திக்கு தேவையான பொருட்கள்:
- மைதா மாவு – 5௦௦ கிராம்
- எண்ணெய் – 1/2 மேசைக்கரண்டி
- உப்பு – சுவைக்கேற்ப
- பால் – 1/2 கப் அல்லது 125 மில்லி
- சோடா மாவு – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
- தண்ணீர் – தேவைக்கேற்ப
முறை :
- மைதா மாவு, எண்ணெய், உப்பு, பால் மற்றும் சோடா மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
- ஒரு மணி நேரம் ஊற விடவும்.
- வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலையை நறுக்கிக்கொள்ளவும்.
- பெரிய சட்டியில் எண்ணெயை சூடாக்கவும்.
- நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து சில நிமிடங்கள் வெங்காயம் மென்மையாகும் வரை வறுக்கவும்.
- தக்காளி மற்றும் அனைத்து மசாலா தூள்களும் சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும்.
- சிக்கன் துண்டுகள், நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கவும்.
- இந்த ஸ்டஃப்பிங்கை சட்டியில் இருந்து நீக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து குளிர விடவும்.
- மைதா மாவை 3 cm அளவு பந்துகளாக பிடித்துக் கொள்ளவும்.
- முட்டையை அடித்துக் கொள்ளவும்.
- மாவை 12-15 cm அளவு சப்பாத்தியாக தேய்த்துக் கொள்ளவும்.
- சப்பாத்தியின் ஒரு புறம் அடித்த முட்டையை தேய்த்துக் கொள்ளவும்.
- அதைத் திருப்பி ஒரு மேசைக்கரண்டி ஸ்டஃப்பிங் நிரப்பவும்.
- அதை சுருட்டி ரோல் ஆக்கவும்.
- மேலே உள்ள செய்முறைகளை அனைத்து சப்பாத்திகளுக்கும் பின்பற்றவும்.
- ஒரு பெரிய சுத்தமான வாணலியை சூடாக்கவும்.
- சிறிது எண்ணெய் சேர்த்து அனைத்து ரோல்களையும் வறுக்கவும்.
மற்ற பெயர்கள் : Frankie
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு