கிரில்டு பிஷ்
மீனுடன் எலுமிச்சை சாறு, ஆலிவ் ஆயில் மற்றும் பூண்டு சேர்ந்த சத்தான உணவு.
Posted by
ShareRecipes Staff
02/05/2014
Click to rate this post!
[Total: 0 Average: 0]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 5 நிமிடங்கள்
மரினேஷன் நேரம் :10-20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 10-15 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 2-3
குறிச்சொற்கள் :
Fish
தேவையான பொருட்கள் :
- கானாகெளுத்தி / ரெயின்போ ட்ரௌட் / ஸீபாஸ் (ஒவ்வொன்றும் 3௦௦ கிராம் எடை) – 3
- பூண்டு – 5 பெரிய பல்லு நசுக்கியது
- எலுமிச்சை சாறு – 3 மேசைக்கரண்டி
- ஆலிவ் ஆயில் – 2 மேசைக்கரண்டி + 2 மேசைக்கரண்டி கிரில்லின் போது
- அரைத்த மிளகு – 1 தேக்கரண்டி மிதமான காரத்துக்கு அல்லது 2
- தேக்கரண்டி அதிக காரத்துக்கு
- நறுக்கிய கொத்தமல்லி இலை – 1 மேசைக்கரண்டி
- காய்ந்த மிளகாய் – 1 (விரும்பினால்)
- உப்பு – சுவைக்கேற்ப
முறை :
- கொத்தமல்லி இலையை நறுக்கிக் கொள்ளவும்.
- மீன் மீது இரு புறமும் கீறிக் கொள்ளவும்.
- நசுக்கிய பூண்டு, 3/4 அளவு நறுக்கிய கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு, 2 மேசைக்கரண்டி ஆலிவ் ஆயில் மற்றும் அரைத்த மிளகு சேர்த்து கலக்கவும்.
- மீனை இந்த சாற்றில் போடவும். மீனில் ஏற்படுத்திய பிளவுகளில் இந்த மாவு செல்லும்மமாறு பார்த்துக்கொள்ளவும்.
- 15-2௦ நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
- கிரில்லை சூடாக்கவும்.
- மீனை பெரிய ஓவன்-ப்ரூப் பாத்திரத்தில் வைக்கவும்.
- இந்த பாத்திரத்தை கிரில்லின் கீழ் வைக்கவும்.
- மீன் மீது சிறிது எண்ணெய் ஊற்றவும்.
- ஒரு புறத்தை 5-6 நிமிடங்கள் கிரில் செய்யவும்.
- பாத்திரத்தை வெளியே எடுத்து மீனை திருப்பி மீனின் மேல் புறம் ஆலிவ் ஆயில் தேய்க்கவும்.
- மற்றொரு புறத்தையும் 5-6 நிமிடங்கள் கிரில் செய்யவும்.
- மீனை கிரில்லில் இருந்து நீக்கி பரிமாறும் பாத்திரத்தில் வைத்து மீதமுள்ள கொத்தமல்லி இலையை வைத்து அலங்கரிக்கவும்.
குறிப்புகள் : மீன் சிறியதாக இருந்தால்,கிரில் நேரத்தை 2-3 நிமிடங்கள் குறைத்துக் கொள்ளவும். மீன் 3௦௦ கிராமுக்கும் அதிகமாக இருந்தால் கிரில் நேரத்தை 2-3 நிமிடங்கள் அதிகரித்துக் கொள்ளவும்.
மற்ற பெயர்கள் : Grilled fish
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு