கிரில்டு இறால்
பூண்டு, ஒலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிரில்லின் கீழ் வறுக்கப்படும் சுவையான உணவு.
Posted by
ShareRecipes Staff
07/05/2014
Click to rate this post!
[Total: 1 Average: 5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 5 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 5-6
குறிச்சொற்கள் :
Seafood
பிரதான மூலப்பொருள் :
கடல்வாழ்வன
செய்முறை வகை :
மதிய உணவு விருந்து உணவு
தேவையான பொருட்கள் :
- ஓடுடன் கூடிய ராஜ இறால் – 5௦௦ கிராம்
- பூண்டு – 4-5 பெரிய பல்லு-நசுக்கியது
- எலுமிச்சை சாறு – 3 மேசைக்கரண்டி
- ஆலிவ் ஆயில் – 3 மேசைக்கரண்டி
- அரைத்த மிளகு – 1 தேக்கரண்டி மிதமான காரத்துக்கு அல்லது
- 2 தேக்கரண்டி அதிக காரத்துக்கு
- நறுக்கிய கொத்தமல்லி இலை – 2 தேக்கரண்டி (விரும்பினால்)
- உப்பு – சுவைக்கேற்ப
முறை :
- கொத்தமல்லி இலையை நறுக்கிக் கொள்ளவும்.
- இறால், நசுக்கிய பூண்டு, எலுமிச்சை சாறு, ஆலிவ் ஆயில், அரைத்த மிளகு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இதை 1௦-15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
- கிரில்லை சூடாக்கவும்.
- அனைத்து இறால்களையும் ஒரே லேயராக பெரிய ஓவன்-ப்ரூப் பாத்திரத்தில் வைக்கவும்.
- பாத்திரத்தை கிரில்லின் கீழ் வைக்கவும்.
- இறாலின் ஒரு புறத்தை 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும்.
- பாத்திரத்தை வெளியே எடுத்து இறால்களைத் திருப்பவும்.
- மறு புறத்தையும் 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும்.
- இறால்களை கிரில்லில் இருந்து நீக்கி பரிமாறும் பாத்திரத்தில் வைத்து கொத்தமல்லி இலை கொண்டு அலங்கரிக்கவும்.
குறிப்புகள் : ஒவ்வொரு இறாலும் தலை இல்லாமல் 2inch-ஐ விட நீளமாக இருந்தால், இன்னும் 2 நிமிடங்கள் அதிகமாக கிரில் செய்யவும்.
மற்ற பெயர்கள் : Grilled prawns
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு