கோலா உருண்டை
கோலா உருண்டை, விசேஷ தினங்களில் செய்யப்படும் சுவையான தீனி அல்லது சைடு-டிஷ்.
Posted by
ShareRecipes Staff
15/05/2014
Click to rate this post!
[Total: 2 Average: 4.5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 20-30 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 20-30 நிமிடங்கள்
செய்கிறது : 25 - 30
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»கூடுதல் உணவு»
குறிச்சொற்கள் :
Keema
பிரதான மூலப்பொருள் :
ஆட்டு இறைச்சி
செய்முறை வகை :
மதிய உணவு
தேவையான பொருட்கள் :
- நறுக்கிய கொத்தமல்லி இலை – 1/2 மேசைக்கரண்டி
- உப்பு – சுவைக்கேற்ப
- எண்ணெய் – 250 மில்லி பொரிக்க
அரைக்க வேண்டியவை:
- கொத்து இறைச்சி(கைமா) – 300 கிராம்
- நறுக்கிய வெங்காயம் – 6 மேசைக்கரண்டி
- இஞ்சி-பூண்டு விழுது – 4 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 3
- பட்டை – 1” நீள துண்டு
- கிராம்பு – 2
- ஏலக்காய் – 2
- கசகசா – 1 தேக்கரண்டி (விரும்பினால்)
- துருவிய தேங்காய் – 5 மேசைக்கரண்டி
- பொட்டு கடலை – 4 மேசைக்கரண்டி
- எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
முறை :
- வெங்காயம், மிளகாய் மற்றும் தேங்காயை பெரிதாகவும், கொத்தமல்லியை சிறிதாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
- கைமாவை அலசி வடிக்கட்டவும்.
- பொட்டு கடலை, பட்டை, கிராம்பு, தோல் இல்லாத ஏலக்காய், கசகசாவை தண்ணீர் இல்லாமல் அரைக்த்து தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள அனைத்து அரைக்க வேண்டிய பொருட்களையும் சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைக்கவும். கறி அரைபடவில்லை எனில், 2 பாகமாக பிரித்து அரைக்கவும்.
- அரைத்த கறி, அரைத்த பொட்டு கடலை போடி, இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, நறுக்கிய கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- அவற்றை 3cm பந்துகளாக பிடித்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
- 5-6 கறி உருண்டைகளை ஒரே நேரத்தில் எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
குறிப்புகள் : இதை, விருந்துகளில் பசி உண்டாக்கும் உணவாக அல்லது மதிய உணவு/ இரவு உணவில் சைடு-டிஷ்ஷாகவும் பரிமாறலாம்.
மற்ற பெயர்கள் : Kola urundai, Kofta,Meat ball
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு