மட்டன் கட்லெட் (சாமி கெபாப்)
மட்டன் கட்லெட் (அ) சாமி கெபாப், கொத்து இறைச்சியுடன் இந்திய மசாலாக்கள் சேர்த்து செய்யப்படும் ஒரு சுவையான திண்பண்டம்.
Posted by
ShareRecipes Staff
11/06/2014
Click to rate this post!
[Total: 2 Average: 5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10-15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்
செய்கிறது : 12 - 15
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»பசி தூண்டி»
குறிச்சொற்கள் :
Keema
பிரதான மூலப்பொருள் :
ஆட்டு இறைச்சி
செய்முறை வகை :
மதிய உணவு
தேவையான பொருட்கள் :
- கொத்தமல்லி இலை – ½ டேபிள்ஸ்பூன்
- முட்டை – 1
- மைதா மாவு – 200கி
- உப்பு
- எண்ணெய் – 300-400மி.லி
பொறிப்பதற்கு தேவையான பொருட்கள்:
- கொத்து இறைச்சி (கைமா) - 400கி
- இலவங்க பட்டை- 1’
- கிராம்பு – 2
- ஏலக்காய் – 1
- கசகசா – 1 டீஸ்பூன்
- துருவிய தேங்காய் – 4 மேசைக்கரண்டி
- மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- பொட்டுக் கடலை – 1 மேசைக்கரண்டி
- வெங்காயம் – 1/2
- இஞ்சி – 1” x 1”
- பூண்டு – 3 பற்கள்
- பச்சை மிளகாய் – 2
முறை :
- உழித்த வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை பொடிசாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.
- கொத்து இறைச்சியை நன்றாக கழுவிக்கொள்ளவும்.
- ஒரு கடாயை சூடுபடுத்தி, கிராம்பு, பட்டை, கசகசா, ஏலக்காய், பொட்டுக் கடலை, துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்க்கவும். அவற்றை சில நிமிடங்கள் வறுக்கவும்.
- நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து 3-4 நிமிடங்கள் வறுக்கவும்.
- பிறகு கொத்து இறைச்சி, மஞ்சள்தூள், உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து , 7-8 நிமிடங்கள் வறுக்கவும்.
- சேர்க்கப்பட்ட அனைத்து பொருட்களையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- முட்டையை உடைத்து ஒரு சிறிய கோப்பையில் வைத்துக்கொள்ளவும்.
- அரைத்த பொருட்களுடன், உடைத்த முட்டை மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.
- 3 செ.மீ அழுவு உருண்டையாக இறைச்சி கலவையை எடுத்து கட்லெட்டாக தட்ட வேண்டும்.
- மைதா மாவை ஒரு தட்டில் வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு படுத்தவும்.
- 4-5 உருட்டிய கட்லெட்களை மாவில் பிரட்டி எண்ணெய்யில் கோல்டன்-பிரவுன் நிறம் வரும்வரை நன்றாக வறுக்கவும்.
குறிப்புகள் : இந்த பண்டம் விருந்துகளில் சிற்றுண்டியாக சாப்பிடலாம்.
மற்ற பெயர்கள் : mutton cutlet,Shami kebab
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு