வெஜிடபிள் பிரியாணி

அரிசி, காய்கறிகள் மற்றும் மசாலா ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் சிறப்பு இந்திய உணவு. சைவப் பிரியர்களுக்கான சிறந்த விருந்து

Posted by ShareRecipes Staff
25/02/2014

Click to rate this post!
[Total: 2 Average: 5]
Please rate it

தயாரிப்பு நேரம் : 20-30 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 1 - 1 1/2 மணி நேரம்

செய்முறை புகைப்படத்தைப் பதிவேற்றுக


பிரதான மூலப்பொருள் : அரிசி உருளைக்கிழங்கு காய்கறி

தேவையான பொருட்கள் :

 

  • 1 கிலோ பாசுமதி அரிசி
  • 250 கிராம் அல்லது 1 பெரிய உருளைக் கிழங்கு (பெரிதாக நறுக்கப்பட்ட)
  • 100 கிராம் அல்லது 1 நடுத்தர அளவு கேரட் (பெரிதாக நறுக்கப்பட்ட)
  • 100 கிராம் பட்டாணி
  • 100 கிராம் நறுக்கிய பீன்ஸ்
  • 100 கிராம் காலிஃபிளவர் பூக்கள்
  • 100 கிராம் பட்டர் பீன்ஸ் (விரும்பினால்)
  • 1/2 நடுத்தர அளவு பீட்ரூட்
  • 1/2 நடுத்தர அளவு காப்சிகம்
  • 250 மில்லி எண்ணெய்
  • 4 மேசைக் கரண்டி தயிர்
  • 450 கிராம் அல்லது 3 பெரிய வெங்காயம்
  • 400 கிராம் அல்லது 6 தக்காளி
  • 6-8 பச்சை மிளகாய்
  • 4 மேசைக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது
  • 4 மேசைக்கரண்டி நறுக்கிய புதினா இலை
  • 4 மேசைக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி இலை
  • 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  • 2" நீட்டமான இலவங்கப்பட்டை துண்டு
  • 2 ஏலக்காய்
  • 2-3 கிராம்பு
  • 2 மேசைக்கரண்டி நெய்
  • 1 மேசைக்கரண்டி எலுமிச்சைச் சாறு
  • தேவைக்கேற்ப தண்ணீர்

முறை :
  1. வெங்காயம், தக்காளி, மிளகாய், காய்கறிகள் மற்றும் இலைகளை நறுக்கிக் கொள்ளவும்.
  2. அரிசியை நன்றாக கழுவி 15 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.
  3. 7-8 லிட்டர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கி, எண்ணெய் முழுவதையும் சேர்க்கவும்.இலவங்கம், கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக வறுக்கவும்.
  4. எண்ணெயில் வெங்காயத்தைப் போட்டு மிதமான சூட்டில் வைத்து, சுமார் 10-12 நிமிடங்கள் வரை நன்றாக வதக்கவும்.
  5. மிளகாய் மற்றும் இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து சுமார் 3-4 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  6. பட்டாணி தவிர மற்ற காய்கறிகள் அனைத்தையும் அதில் போட்டு சுமார் 8-10 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  7. மிளகாய்த் தூள் ஆகியவற்றை சேர்த்து 6-8 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  8. தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
  9. அரிசியை வடிகட்டி, காய்கறிப் பாத்திரத்தில் சேர்க்கவும்.
  10. சட்டியில் சுமார் 2.2 லிட்டர் தண்ணீரை இதில் சேர்க்கவும்.
  11. தேவைப்பட்டால் உப்பு சேர்த்து அதில் 2 தேக்கரண்டி நெய் மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்.
  12. சட்டியை நன்றாக மூடி சுமார் 25-30 நிமிடங்களுக்கு சமைக்கவும்
  13. அடுப்பை அணைப்பதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன் பட்டாணியைச் சேர்க்கவும்
  14. அரிசி பதமானவுடன் அடுப்பை அனைக்கவும்
  15. பிரியாணி சாப்பிடத் தயார்

மற்ற பெயர்கள் : Vegetable Biriyani


 

இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.




 

அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (178)

By continuing to use the site, you agree to the use of cookies. more information

The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

Close