பீட்ரூட் மட்டன் மசாலா
பீட்ரூட் மட்டன் மசாலா என்பது, ஆட்டுக்கறியுடன் பீட்ரூட்டை சேர்த்து செய்யும் புரத சத்து மிக்க சத்தான உணவாகும். ஆட்டுக்கறியின் வாசம் பீட்ரூட்டில் சார்ந்து பீட்ரூட் சுவையாக இருக்கும்.
Posted by
ShareRecipes Staff
07/03/2014
Click to rate this post!
[Total: 1 Average: 5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 30-45 நிமிடங்கள்
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
Beetroot, chapati side dish, Mutton
பிரதான மூலப்பொருள் :
ஆட்டு இறைச்சி காய்கறி
செய்முறை வகை :
மதிய உணவு
தேவையான பொருட்கள் :
- ஆட்டிறைச்சி - 500 கிராம்
- பீட்ரூட் - 1 பெரியது அல்லது 2 நடுத்தர அளவு
- வெங்காயம் – 250 கிராம்
- தக்காளி - 3
- இஞ்சி
- பூண்டு - 3 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 1 (விருப்பமானால்)
- பட்டை – 1” நீண்ட துண்டு
- கொத்தமல்லி இலைகள் - சில
- எண்ணெய் - 4 மேசைக்கரண்டி மற்றும் 1-2 தேக்கரண்டி கடைசியில் சேர்க்க
- உப்பு - சுவைக்கு
- தண்ணீர் – தேவையான அளவு
மசாலாப் பொடிகள்:
- மஞ்சத்தூள் - 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1 மிதமான காரத்திற்கு அல்லது 2 தேக்கரண்டி அதிக காரத்திற்கு
முறை :
- 2 செ.மீ க்யூப்களாக பீட்ரூட்டை வெட்டவும். வெங்காயம், தக்காளி, மிளகாய், கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை நறுக்கவும்.
- ஒரு பிரஷர் குக்கர் பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கவும்.
- 2-3 நிமிடங்கள் பீட்ரூட் சேர்த்து, வதக்கவும். பாத்திரத்தில் இருந்து நீக்கி, ஒரு பக்கமாக வைக்கவும்.
- பாத்திரத்தில் பட்டை மற்றும் வெங்காயம் சேர்க்கவும். சுமார் 4-5 நிமிடங்கள் அவற்றை வறுக்கவும்.
- இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும்.
- நறுக்கியத் தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்; 2-3 நிமிடங்கள் கிளறவும்.
- ஆட்டிறைச்சி துண்டுகளை சேர்த்து, கிளறி 2-3 நிமிடங்கள் சமைக்கவும்.
- மூடியிட்டு, மிதமான வெப்பத்தில் பிரஷர் குக்கரில் சமைக்கவும். முதல் விசிலிற்குப் பிறகு, வெப்பத்தை குறைத்து, 12-14 நிமிடங்கள் குறைந்த வெப்பத்தில் சமைக்கவும். பிரஷர் போனதும் மூடியைத் திறக்கவும்.
- பீட்ரூட் சேர்த்து, கிளறவும்.
- மூடியிட்டு, மிதமான வெப்பத்தில் பிரஷர் குக்கரில் மீண்டும் சமைக்கவும். 2 விசிலிற்குப் பின்னர் அடுப்பினை அணைக்கவும். பிரஷர் போனதும் மூடியைத் திறக்கவும்.
- மிதமான வெப்பத்தில் இன்னும் சில நிமிடங்கள், சாறு அடர்த்தியாகும் வரைக் குழம்பினை கொதிக்கவிடவும். குழம்பு பாத்திரத்தின் கீழே ஒட்டிக்கொள்ள ஆரம்பித்தால், சுமார் 1-2 தேக்கரண்டி எண்ணெயைச் சேர்க்கவும்.
- கொத்தமல்லி இலைகள் கொண்டு அலங்கரிக்கவும்.
குறிப்புகள் : இந்த உணவு சாதம்/சப்பாத்தி/நா ண் ஆகியவற்றுக்கு நல்ல சுவை கொடுக்கும். மாறுபாட்டிற்கு, கீரை ஆட்டுக்கறி மசாலா அல்லது உருளைக்கிழங்கு ஆட்டுக்கறி மசாலா ஆகியவற்றை முயற்சிக்கவும். தயவுசெய்து சமையல் எச்சரிக்கையைப் பார்க்கவும்.
மற்ற பெயர்கள் : Beetroot mutton shaerwa
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு