சன்னா மசாலா
சப்பாத்தி, பூரி, நாண் ஆகியவற்றுடன் சாப்பிடக்கூடிய சுவையான உணவு.
Posted by
ShareRecipes Staff
11/03/2014
Click to rate this post!
[Total: 7 Average: 3.4]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 20-30 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 3-4
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
Channa, chapati side dish, Indian Vegetarian
பிரதான மூலப்பொருள் :
பருப்பு / கடலை
தேவையான பொருட்கள் :
- கொண்ட கடலை (Channa) – 250 கிராம்
- வெங்காயம் - 2 பெரியது
- தக்காளி - 300 கிராம் (அல்லது) 4
- தக்காளி பூரி (puree) - 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 1
- இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
- எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன் மற்றும் 2 டீஸ்பூன்
- தயிர் – 1 டேபில் ஸ்பூன்
- சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
- கொத்தமல்லித் தழை (சிறிதாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்
- தண்ணீர் - தேவைக்கேற்ப
- உப்பு - தேவைக்கேற்ப
மசாலா பொடிகள்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
- சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
- சாட் மசாலா - 1/2 டீஸ்பூன் (விரும்பினால்)
முறை :
- சன்னாவை நன்கு கழுவி 2-3 மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊறவைத்த பிறகு தண்ணீருடனும் சிறிது கலந்து பிரஷர் குக்கரில் சுமார் 7-8 நிமிடங்களுக்கு சமைக்க வேண்டும். பிறகு அதனை வடிகட்டவும்.
- வெங்காயத்தையும் தக்காளியையும் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
- நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பழுப்பு நிறம் வரும் வரை வதக்கவும்.
- இஞ்சி - பூண்டு விழுதை அத்துடன் சேர்த்து வதக்கவும்.
- நறுக்கி வைத்த தக்காளியையும், உப்பையும்,பச்சை மிளகாயையும் மற்றும் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து மேலும் சில நிமிடங்களுக்கு வதக்கவும்.
- சன்னாவை சேர்த்து அவற்றை நன்றாக கிளறவும். மசாலாவை மிதமான வெப்பத்தில் சுமார் 5 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
- சுமார் 1/2 கப் தண்ணீரை விடவும்; மசாலா கொதிக்கத் தொடங்கும் போது, வெப்பத்தை குறைத்து, சட்டியை மூடி மேலும் சுமார் 8-10 நிமிடங்களுக்கு அல்லது சன்னா முழுமையாக வேகும் வரை சமைக்கவும். தேவைப்பட்டால் மேலும் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்.
- இறுதியில், இரண்டு தேக்கரண்டி எண்ணெய், சிறிது அடித்த தயிர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி கொதிக்க விடவும்.
- கொத்தமல்லி இலைகளைக் கொண்டு அழகுபடுத்தவும்.
குறிப்புகள் : இது சப்பாத்தி, பூரி மற்றும் நாணுடன் சாப்பிட நன்றாக இருக்கும். மாறுதலுக்காக < a> .. பர்தா , பன்னீர் வெண்ணெய் மசாலா , வெண்டை மசாலா மற்றும் ஆலு கோபி - யை முயற்சிக்கலாம்.
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு