மட்டன் குருமா
மணம் மிக்க மட்டன் குருமா பரோட்டா மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற உணவு.
Posted by
ShareRecipes Staff
13/05/2014
Click to rate this post!
[Total: 2 Average: 4.5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 45-60 நிமிடங்கள்
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
chapati side dish, Indian Special Occasion, Lamb
பிரதான மூலப்பொருள் :
ஆட்டு இறைச்சி
செய்முறை வகை :
மதிய உணவு விருந்து உணவு
தேவையான பொருட்கள் :
- எலும்புடன் கூடிய மட்டன் – 750 கிராம் ( பெரிய துண்டுகளாக வெட்டியது )
- எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
- பட்டை – 4 cm நீள மொத்தமான துண்டு
- கிராம்பு – 2
- ஏலக்காய் – 2
- வெங்காயம் – 2 பெரியது அல்லது 300 கிராம்
- தக்காளி – 3 பெரியது
- பச்சை மிளகாய் – 3 மிதமான காரத்துக்கு அல்லது 5 கூடுதல் காரத்துக்கு
- இஞ்சி-பூண்டு விழுது – 5 தேக்கரண்டி
- தயிர் – 3 மேசைக்கரண்டி + 2 மேசைக்கரண்டி
- உருளைக் கிழங்கு – 1 பெரியது (விரும்பினால்)
- முந்திரி – 10 (விரும்பினால்)
- கசகசா – 1 தேக்கரண்டி (விரும்பினால்)
- டின் தேங்காய் பால் – 3 மேசைக்கரண்டி அல்லது
- 250 மில்லி வீட்டில் செய்த தேங்காய் பால்
- எலுமிச்சை சாறு – 15 மில்லி
- நறுக்கிய புதினா இலை – 1 மேசைக்கரண்டி
- நறுக்கிய கொத்தமல்லி இலை – 1 மேசைக்கரண்டி
- தண்ணீர் – தேவைக்கேற்ப
- உப்பு – சுவைக்கேற்ப
மசாலாத் தூள்:
- மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
முறை :
- அனைத்து வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை கில்லி வைக்கவும்.
- டின் தேங்காய் பால் இல்லையெனில், புதிதாக தேங்காய் பால் செய்யவும்.
- கசகசா மற்றும் முந்திரியை சிறிது தண்ணீர் சேர்த்து பசையாக அரைத்துக் கொள்ளவும்.
- 4-5லிட்டர் பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் சூடானதும், பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து 1/2 நிமிடம் வறுக்கவும்.
- நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் சேர்க்கவும்; அவை பொன்னிறம் ஆகும் வரை மிதமான சூட்டில் கிளறவும்.
- மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
- நறுக்கிய தக்காளி, மிளகாய் தூள், மல்லித் தூள், உப்பு, மட்டன்/ஆட்டு துண்டுகள், நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து 4-5 நிமிடங்கள் வதக்கவும்.
- 3 மேசைக்கரண்டி தயிர் சேர்த்து கலக்கவும்.
- 2௦௦ மில்லி தண்ணீர் சேர்த்து, சட்டியை மூடி மிதமான தீயில் வேக வைக்கவும்.
- முதல் விசில் வந்தவுடன் அடுப்பைக் குறைத்து 12 நிமிடங்கள் பிரஷரில் சமைக்கவும்.
- உருளைக் கிழங்கு சேர்த்து மீண்டும் 5 நிமிடங்கள் பிரஷர் குக்கரில் 2-3 விசில் வரும் வரை சமைத்து அடுப்பை நிறுத்தவும்.
- தேங்காய் பால், 2 மேசைக்கரண்டி தயிர், முந்திரி-கசகசா விழுது மற்றும் மேலும் தண்ணீர் சேர்க்கவும்.
- சில நிமிடங்கள் மிதமான சூட்டில் குழம்பை கொதிக்க விடவும்.
- எலுமிச்சை சாறு சேர்த்து கொத்தமல்லித்தலை தூவி அலங்கரிக்கவும்.
குறிப்புகள் : சமையல் நேரம் - அடுப்பின் வேகம், மட்டன் புதியதா/ஐசில் வைத்ததா, எந்த நாட்டு கறி போன்ற பல காரணங்களால் மாறுபடும். நெய் சாதம்/ சப்பாத்தி/ பரோட்டா அல்லது கோதுமை/மைதா தோசை ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது.
பிரிட்டிஷ் வகை குருமாவை விரும்பினால், இங்கே கிளிக் செய்யவும்.
மற்ற பெயர்கள் : Mutton Kurma, Mutton Kuruma
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு