மட்டன் மசாலா
மட்டன் மசாலா சாதத்திற்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
Posted by
ShareRecipes Staff
16/05/2014
Click to rate this post!
[Total: 2 Average: 3]
Please rate it
சமைக்கும் நேரம் : 30-45 நிமிடங்கள்
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
Mutton
பிரதான மூலப்பொருள் :
ஆட்டு இறைச்சி
செய்முறை வகை :
மதிய உணவு
தேவையான பொருட்கள் :
- மட்டன் – 500 கிராம்
- வெங்காயம் – 400 கிராம்
- தக்காளி – 4
- இஞ்சி-பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 2-3
- பட்டை – 1” நீள துண்டு
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
- எண்ணெய் – 4 மேசைக்கரண்டி + 2 மேசைக்கரண்டி இறுதியில்
- உப்பு – சுவைக்கேற்ப
- தண்ணீர் – தேவைக்கேற்ப
மசாலாத் தூள்:
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மிதமான காரத்திற்கு அல்லது 2 தேக்கரண்டி அதிக காரத்திற்கு
- மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
முறை :
- வெங்காயம், தக்காளி, மிளகாய், கொத்தமல்லி இலை யை நறுக்கிக் கொள்ளவும்.
- பிரஷர் குக்கரில் 3 மேசைக்கரண்டி எண்ணெய்யை சூடாக்கவும்.
- பட்டை, வெங்காயம் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை மிதமான சூட்டில் வதக்கவும்.
- இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- தக்காளி, மிளகாய், அனைத்து மசாலாத தூள்கள் சேர்த்து கிளறி, சில நிமிடங்கள் வதக்கவும்.
- மட்டன் துண்டுகள், 5௦ மில்லி தண்ணீர் சேர்த்து கலக்கி சில நிமிடங்கள் சமைக்கவும்.
- மிதமான சூட்டில் சட்டியை மூடி சமைக்கவும். முதல் விசில் வந்தவுடன், அடுப்பைக் குறைத்து 15 நிமிடங்கள் பிரஷரில் சமைக்கவும். பிரஷர் அடங்கியவுடன், மூடியைத் திறக்கவும்.
- ஒரு நான்-ஸ்டிக் கடாயை சூடாக்கி மீதமுள்ள எண்ணெய்யை சேர்க்கவும்.
- பிரஷர் குக்கரில் உள்ளவற்றை கடாயில் சேர்க்கவும்.
- குழம்பு கெட்டியாகும் வரை மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
- கொத்தமல்லி இலையால் அலங்கரிக்கவும்.
குறிப்புகள் : இது, சாதம் மற்றும் சாம்பார் அல்லது சப்பாத்தி/ நாணுடன் சாப்பிட சுவையானது. மாறுதலுக்கு கீரை-ஆட்டுக்கறி குழம்பு, பீட்ரூட்-மட்டன் மசாலா அல்லது உருளைக்கிழங்கு-மட்டன் மசாலா முயற்சிக்கவும்.
குறிப்பு: அடுப்பின் வேகம், மட்டன் புதியதா/ஐசில் வைத்ததா, எந்த நாட்டு கறி போன்ற பல காரணங்களால் சமையல் நேரம் மாறுபடும். இது சராசரி சமையல் நேரம் ஆகும்.
கறியை சமைத்தவுடன் மசாலாவுடன் நல்ல மணத்துக்காக குடை மிளகாய் சேர்க்கலாம்.
மற்ற பெயர்கள் : lamb masala, Mutton shaerwa, Mutton masala
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு