முட்டை புளிக் குழம்பு
சாதாரண புளிக் குழம்பில், முட்டையை பொத்து ஊத்தி, முட்டை ஆனமாக சாப்பிடலாம். புளிப்பு பிடிக்கிறவர்களுக்கு , இது பிடிக்கும்.
Posted by
ShareRecipes Staff
14/03/2014
Click to rate this post!
[Total: 0 Average: 0]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 20-30 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 3-4
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»முக்கிய உணவு»
தேவையான பொருட்கள் :
- பெரிய நெல்லிக்காய் அளவு புளி
- 4 முட்டை
- சின்ன வெங்காயம் – 12-14 அல்லது 1 வெங்காயம் சிறியது
- 1/2 தக்காளி
- 2 சிறிய பல் பூண்டு
- 1 பச்சை மிளகாய்
- 4-5 கொத்தமல்லி இலை (விரும்பினால்)
- 1 தேக்கரண்டி வெந்தயம்
- 150 மில்லி தேங்காய்ப் பால்
- 200 மில்லி சுடு தண்ணீர்
- 2 மேசைக் கரண்டி எண்ணெய்
- தேவைக்கேற்ப தண்ணீர்
- சுவைக்கேற்ப உப்பு
- மசாலாப் பொடிகள்:
- 1/8 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1/4 தேக்கரண்டி மிளகுத் தூள்
- மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி மிதமான காரத்திற்கு அல்லது 2 தேக்கரண்டி அதிக காரத்திற்கு
- 4 தேக்கரண்டி கொத்தமல்லித் தூள்
முறை :
- புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்து, காய்கறி வெட்டும் வரை பொறுத்திருக்கவும்.
- வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்; மிளகாயை கிள்ளிக் கொள்ளவும்.
- புளியை நன்றாக பிழிந்து, புளிச்சாறை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
- சட்டியை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன், வெந்தயம் சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
- நறுக்கிய வெங்காயம், பூண்டு, மிளகாய் மற்றும் தக்காளி ஆகியவற்றையும் சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும்.
- இப்போது அனைத்து மசாலாப் பொடிகளையும் சேர்த்து இன்னுமொரு நிமிடம் வறுக்கவும்.
- புளிச்சாறையும், சிறிது தண்ணீரையும், உப்பையும் சேர்க்கவும்.
- பூண்டு வேகும் வரை நன்றாக கொதிக்க விடவும்.
- அடுப்பை அணைத்து, 1/2 கப் தண்ணீர் மற்றும் தேங்காய்ப் பாலை ஊற்றவும். நன்றாக கலக்கவும்.
- முட்டையை உடைத்து ஒவ்வொன்றாகக் குழம்பில் ஊற்றவும்.
- பாத்திரத்தை மிதமான சூட்டில் 1-2 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.பிறகு சூட்டை இன்னும் குறைத்து, 5-6 நிமிடம் வரை வேக விடவும்.
- முட்டை புளிக் குழம்பு தயார்.
குறிப்புகள் : இதை சாதத்துடனோ கீரை-பருப்பு கூட்டு
and முட்டைக்கோஸ் பொரியல்ஆகியவற்றில் ஒன்றுடனோ சேர்த்து உண்ணலாம். சிறிய மாற்றத்திற்கு,ஆம்லெட் புளிக்குழம்பை அல்லது காய்கறி புளிக் குழம்பை முயற்சிக்கவும்.
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு