முட்டை ஆம்லெட் புளிக் குழம்பு
சாதாரண புளி குழம்பில் முட்டையை ஆம்லெட்டாக பொறித்து போட்டு, முட்டை ஆனமாக சாப்பிடலாம்.
Posted by
ShareRecipes Staff
17/03/2014
Click to rate this post!
[Total: 2 Average: 3]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 20-30 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 4-5
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
Egg, South Indian, tamarind
தேவையான பொருட்கள் :
மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி மிளகுத் தூள் - 1/4 தேக்கரண்டி மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி மல்லித் தூள் – 2 மேசைக்கரண்டி
புளிக் குழம்பு செய்ய
- புளி – எலுமிச்சை அளவு உருண்டை
- சின்ன வெங்காயம் - 14-16 அல்லது 1 வெங்காயம் நடுத்தர அளவு
- தக்காளி - 1
- பூண்டு பல்லு - 2 சிறியது
- பச்சை மிளகாய் - 1
- கறிவேப்பிலை – 1 கொத்து
- வெந்தயம் - 1 தேக்கரண்டி
- தேங்காய் பால் - 200 மில்லி
- வெந்நீர் - 200 மில்லி
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- தண்ணீர் - தேவைக்கேற்ப
- உப்பு - சுவைக்கேற்ப
மசாலாத் தூள்::
ஆம்லெட் செய்ய தேவையானவை:
- முட்டை ( நடுத்தர அளவு ) - 4
- சின்ன வெங்காயம் - 10-12 அல்லது 1 வெங்காயம் சிறியது
- மஞ்சள் தூள் - 1/8 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 1
- நுணுக்கிய மிளகு - 1/8 தேக்கரண்டி
- உப்பு - சுவைக்கேற்ப
- எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
முறை :
- புளியைக் கழுவி சில நிமிடங்கள் வெந்நீரில் ஊற வைக்கவும்.
- வெங்காயம், தக்காளி மற்றும் மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலையை கழுவிக் கொள்ளவும்.
- ஊற வைத்த புளியைப் நன்றாக பிழிந்து, புளிக் கரைசலை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தை சூடாக்கி, எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
- நறுக்கிய வெங்காயம், பூண்டு, மிளகாய், தக்காளி சேர்த்து 2-3 நிமிடங்கள் வறுக்கவும்.
- எல்லா மசாலா தூள்களையும் சேர்த்து, புளிக் கரைசல், சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- பாத்திரத்தை மூடி பூண்டு வேகும் வரை சமைக்கவும்.
- நடுவில் தண்ணீர் அளவை சரி பார்க்கவும். தண்ணீர் குறைவாக இருந்தால் தண்ணீர் சேர்க்கவும்.
- ஆம்லெட் துண்டுகளை புளிக் குழம்பில் போடவும்.
- புளிக் குழம்பை சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
- கறிவேப்பிலை தூவி முட்டை ஆம்லெட் புளிக் குழம்பை பரிமாறலாம்.
ஆம்லெட் செய்முறை:
- வெங்காயம் மற்றும் மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அதோடு மஞ்சள் தூள், நுணுக்கிய மிளகு, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- முட்டையை அடித்து, அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய் மற்றும் மசாலா சேர்த்து நன்றாக அடித்துக் கலக்கவும்.
- சூடான கடாயில் எண்ணெய் சேர்க்கவும்.
- முட்டை கலவையை இரண்டாக பிரித்து, ஒரு பாதியை கடாயில் ஊற்றவும்.
- இரு புறமும் நன்றாக வெந்தவுடன் கவனமாக திருப்பி, 4 முக்கோண துண்டுகளாக வெட்டவும்.
- இதே முறையை மற்ற முட்டைகளுக்கும் பின்பற்றவும்.
குறிப்புகள் : வேறு சுவைக்கு, புளிக்கு பதிலாக எலுமிச்சை / தக்காளி கூழ் சேர்க்கலாம். பருப்பு சுரைக்காய் மற்றும் முட்டைகோஸ் பொரியலுடன் பொரியலுடன் சாப்பிட ஏற்றது. மாறுதலுக்காக, முட்டை புளிக் குழம்பு
அல்லது காய்கறி புளிக் குழம்பை முயற்சிக்கலாம்.
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு