காளிஃபிளவர் கேரட் பட்டாணி குருமா

காளிஃபிளவர், கேரட் மற்றும் பட்டாணி குருமா, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ஏற்றதாகும்.

Posted by ShareRecipes Staff
06/02/2014

Click to rate this post!
[Total: 1 Average: 1]
Please rate it

தயாரிப்பு நேரம் : 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்

சேவை செய்கிறது : 4-5

செய்முறை புகைப்படத்தைப் பதிவேற்றுக


பிரதான மூலப்பொருள் : காய்கறி
செய்முறை வகை : இரவு உணவு

தேவையான பொருட்கள் :

 

  • காளிஃபிளவர் - 250 கிராம் அல்லது 1 சிறியது
  • கேரட் - 150 கிராம் அல்லது 1 நடுத்தர அளவு
  • பட்டாணி - 150 கிராம்
  • வெங்காயம் - 1 நடுத்தர அளவு
  • இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
  • தயிர் - 1 டேபில் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2 மிதமான காரத்திற்கு அல்லது 3 அதிக காரத்திற்கு
  • பட்டை - 1 அங்குல நீளம்
  • கிராம்பு - 1
  • முந்திரி - 30 கிராம்
  • சோம்பு - 3/4 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிது
  • கசகசா - 1/2 டீஸ்பூன்
  • எண்ணெய் - 3 டேபில் ஸ்பூன்
  • உப்பு - சுவைக்கு

முறை :
  1. காளிஃபிளவரை தனித்தனி பூக்களாக வெட்டிக் கொள்ளவும். கேரட்டை 1 சென்டிமீட்டர் அளவுக்கு துண்டுகளாக நறுக்கவும்.
  2. வெங்காயத்தை சிறிது சிறிதாக வெட்டவும்.
  3. முந்திரி மற்றும் கசகசாவை 5-10 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊறவைக்கவும்.
  4. சட்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடுபடுத்தவும்.
  5. பட்டை, கிராம்பு மற்றும் வெங்காயம் சேர்க்கவும். 4 - 5 நிமிடங்களுக்கு வதக்கவும். சட்டியிலிருந்து அவற்றை எடுத்து ஆற வைத்து அரைக்கவும்.
  6. அதே சட்டியில் இன்னொரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடுபடுத்தவும்.
  7. போதுமான அளவு சூடானவுடன் கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு விழுது ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
  8. அரைத்த விழுது, மிளகாய் மற்றும் அனைத்து காய்கறிகளையும் அதில் சேர்த்து, 3-4 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  9. சோம்பு, கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை போட்டு கலக்கவும்.
  10. தண்ணீர் சேர்த்து, 10 நிமிடம் மூடிவைத்து சமைக்கவும்.
  11. முந்திரி மற்றும் கசகசாவை தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  12. இதை சமைத்த காய்கறியில் சேர்த்து, 2-3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
  13. கறிவேப்பிலை போட்டு அலங்கரிக்கவும்.

மற்ற பெயர்கள் : vegetable korma


 

இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.




 

அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (178)

By continuing to use the site, you agree to the use of cookies. more information

The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

Close