தேங்காய்ப்பால் கோழி ஆனம்
தேங்காய் பால், பச்சை மிளகாய் கொண்டு சமைத்த நறுமணமான இந்த கோழி ஆனம் தக்காளி சேர்க்காமல் சமைத்த ருசியான குழம்பாகும்.
Posted by
ShareRecipes Staff
11/03/2014
Click to rate this post!
[Total: 1 Average: 4]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 30-45 நிமிடங்கள்
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
Chicken, Coconut milk
பிரதான மூலப்பொருள் :
கோழி இறைச்சி
தேவையான பொருட்கள் :
- சிக்கன் - 500 கிராம்
- எண்ணெய் - 3 மேசைக் கரண்டி
- பட்டை - 1" துண்டு
- கிராம்பு - 3-4
- வெங்காயம் - 300 கிராம் அல்லது 3 நடுத்தர அளவு
- பச்சை மிளகாய் - 3 for மிதமான காரத்திற்கு அல்லது 4 அதிக காரத்திற்கு
- இஞ்சி-பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
- தேங்கய்ப்பால் - 1 கப் (250மி.லி)
- எலுமிச்சை சாறு - 2 மேசைக் கரண்டி
- நறுக்கிய கொத்தமல்லி இலை - 1 மேசைக் கரண்டி
- உப்பு - சுவைக்கேற்ப
- தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
மசாலா பொடிகள்
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- மிளகுத் தூள் – 3/4 தேக்கரண்டி மிதமான காரத்திற்கு அல்லது 1 1/4 தேக்கரண்டி அதிக காரத்திற்கு
- சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
முறை :
- வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கிக் கொள்ளவும்.
- தேங்காய் பாலை தயாரிக்கவும்.
- கோழி துண்டுகளை நன்றாகக் கழுவி தண்ணீரை வடிக்கவும்.
- அடுப்பில் 3-4லிட்டர் பிரஷர் குக்கர் கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானவுடன், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து வறுக்கவும்.
- நறுக்கியெடுத்த வெங்காயத்தை சேர்த்து பழுப்பு நிறம் வரும் வரை கிளறவும்.
- மிளகாய், இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
- அனைத்து மசாலா பொடிகளையும் மற்றும் கோழி துண்டுகளையும் சேர்த்து சுமார் 4-5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்க்கவும்.
- கடாயில் சுமார் 1/2 கப் தண்ணீரை சேர்க்கவும்.
- குக்கரை மூடிவிட்டு மிதமான வெப்பத்தில் சமைக்கவும். முதல் விசில் வந்தவுடன் அடுப்பை குறைத்து மேலும் 3-4 நிமிடங்களுக்கு கோழிக்கறியை வேக வைக்கவும்.
- தேங்காய் பாலை சேர்த்து,மீண்டும் 3-4 நிமிடங்களுக்கு ஒரு நடுத்தர வெப்பத்தில் கொதிக்க விடவும்.
- கொத்தமல்லி இலைகளைக் கொண்டு அழகுபடுத்தவும்.
குறிப்புகள் : குஞ்சுக்கோழிக்கறியில் செய்தால் சுவை மேலும் அருமையாக இருக்கும். சாதம், சப்பாத்தி மற்றும் பரோட்டா உடன் சாப்பிடுவதற்கு ஏற்றது. எப்பொழுதும் செய்யும் கோழி குழம்பு செய்ய இங்கே கிளிக் செய்யவும். சமையல் நேரம் தொடர்பான எச்சரிக்கையை தயவு செய்து பார்க்கவும்.
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு