சேப்பக்கிழங்கு பொரியல்
Click to rate this post!
[Total: 1 Average: 4]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 3-4
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»கூடுதல் உணவு»
குறிச்சொற்கள் :
South Indian Vegetarian
தேவையான பொருட்கள் :
- சேப்பக்கிழங்கு – 25௦ கிராம்
- சீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
- எண்ணெய் – 2 மேசைக்கரண்டி + 1 மேசைக்கரண்டி
- கருவேப்பிலை – 1 கொத்து
- தண்ணீர் – தேவைக்கேற்ப
- உப்பு – சுவைக்கேற்ப
முறை :
- சேப்பக்கிழங்கை கழுவி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
- சேப்பக்கிழங்கை உரித்து 1-2cm துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- கடாயை சூடாக்கி அதில் எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானதும் கருவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும்.
- மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்.
- சேப்பக்கிழங்கு, சிறிதளவு உப்பு மற்றும் சீரகத் தூள் சேர்க்கவும்.
- 1௦-12 நிமிடங்கள் முறுகலாகும் வரை வறுக்கவும்.
- தேவைப்பட்டால் எண்ணெய் சேர்க்கவும்.
- தயார் ஆனதும் பரிமாறவும்.
குறிப்புகள் : சேப்பக்கிழங்கு என்பது சிறிய மற்றும் விரல் அளவு, கருஞ்சிவப்பு தோல் கொண்ட கிழங்கு வகை. இது சாதம் மற்றும் சாம்பார்,ரசம்,பருப்பு ஆனம், மோர்க் குழம்பு,முட்டை புளிக் குழம்பு,முட்டை ஆம்லெட் புளிக் குழம்பு அல்லது பூண்டு குழம்பு ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது.
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு