வெந்தய சிக்கன் மசாலா
வெந்தய சிக்கன் மசாலா, சிக்கன் மற்றும் வெந்தய கீரையால் ஆன சத்தான மற்றும் சுவையான சைடு-டிஷ்.
Posted by
ShareRecipes Staff
15/05/2014
Click to rate this post!
[Total: 2 Average: 5]
Please rate it
மரினேஷன் நேரம் :2-3 மணி நேரம்
சமைக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
chapati side dish, Chicken
பிரதான மூலப்பொருள் :
கோழி இறைச்சி
செய்முறை வகை :
மதிய உணவு
தேவையான பொருட்கள் :
- எலும்பில்லாத சிக்கன் – 5௦௦ கிராம்
- வெங்காயம் – 200 கிராம்
- தக்காளி – 2
- வெந்தய கீரை – 15௦ கிராம் அல்லது 1 கட்டு
- இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மிதமான காரத்துக்கு அல்லது
- 1 1/2 அதிக காரத்துக்கு
- பச்சை மிளகாய் – 2
- மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
- ஜீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி
- கரம் மசாலா – 1 தேக்கரண்டி
- பட்டை – 1” நீள துண்டு
- நறுக்கிய கொத்தமல்லி இலை – 2 தேக்கரண்டி
- எண்ணெய் – 3 மேசைக்கரண்டி + 1 மேசைக்கரண்டி இறுதியில்
- உப்பு – சுவைக்கேற்ப
- தண்ணீர் – தேவைக்கேற்ப
ஊறவைக்க தேவையான பொருட்கள்:
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி
- உப்பு – 1/2 தேக்கரண்டி
முறை :
- ஊறவைக்க தேவையான பொருட்களின் கீழ் உள்ளவையோடு சிக்கனை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலையை நறுக்கிக் கொள்ளவும்; மிளகாயை கீறிக் கொள்ளவும்; வெந்தய கீரையில் இலைகளை கில்லி எடுத்து கழுவவும்.
- ஒரு கடாயில் எண்ணெய்யை சூடாக்கவும்.
- பட்டை, வெங்காயம், மிளகாய் சேர்க்கவும். சில நிமிடங்கள் கிளறவும்.
- இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத் தூள், மிளகு தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- நறுக்கிய தக்காளி சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
- சிக்கன் கலவையை சேர்த்து கிளறி சில நிமிடங்கள் வதக்கவும்.
- ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் மற்றும் வெந்தய கீரையை சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும்.
- 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 4-5 நிமிடங்கள் அல்லது எண்ணெய் வெளியே வரும் வரை சமைக்கவும்.
- கொத்தமல்லி இலை கொண்டு அலங்கரிக்கவும்.
குறிப்புகள் : இது சப்பாத்தி/நாணுடன் சாப்பிட ஏற்றது. மாறுதலுக்கு இஞ்சி சிக்கன் மசாலா செய்து பார்க்கலாம்.
மற்ற பெயர்கள் : methi chicken
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு