முட்டை பருப்பாணம்

முட்டை பருப்பாணம், பாசிப் பருப்பு ஆணத்தில் முட்டை ஆம்லெட் சேர்த்து செய்யப்படும் குழம்பு.

Posted by ShareRecipes Staff
15/05/2014

Click to rate this post!
[Total: 0 Average: 0]
Please rate it

தயாரிப்பு நேரம் : 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 20-30 நிமிடங்கள்

சேவை செய்கிறது : 3-4

செய்முறை புகைப்படத்தைப் பதிவேற்றுக


பிரதான மூலப்பொருள் : பருப்பு / கடலை முட்டை
செய்முறை வகை : மதிய உணவு

தேவையான பொருட்கள் :

 

  • பாசி பருப்பு – 1௦௦ கிராம்
  • வெங்காயம் – 1/2 நடுத்தர அளவு
  • பூண்டு – 1 சிறிய பல்லு (விரும்பினால்)
  • பச்சை மிளகாய் – 2
  • தக்காளி – 1 சிறியது
  • நெய் – 1 தேக்கரண்டி அல்லது வெண்ணெய் – 5 கிராம் (விரும்பினால்)
  • எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
  • எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
  • கருவேப்பிலை – 6-7
  • தண்ணீர் – தேவைக்கேற்ப
  • உப்பு – சுவைக்கேற்ப

மசாலாத் தூள்:

  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • அரைத்த சோம்பு – 1/2 தேக்கரண்டி

ஆம்லேட் செய்ய தேவையானவை:

  • முட்டை நடுத்தர அளவு – 3
  • சின்ன வெங்காயம் – 1௦ அல்லது 1 சிறிய வெங்காயம்
  • மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
  • உப்பு – சுவைக்கேற்ப
  • எண்ணெய் – 2-3 மேசைக்கரண்டி

முறை :
  1. பருப்பை அலசி வடிகட்டவும்.
  2. வெங்காயம், தக்காளி மற்றும் மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். கருவேப்பிலையை கழுவிக் கொள்ளவும்.
  3. பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
  4. பருப்பு, 225 மில்லி தண்ணீர், பூண்டு, வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  5. மூடிவைத்து பிரஷரில் சமைக்கவும். இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பை நிறுத்தி, பிரஷர் அடங்கியவுடன் திறக்கவும்.
  6. குழம்பு பதம் வரும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

ஆம்லேட் செய்முறை:

  1. வெங்காயம், மிளகாயை பொடிசாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. மஞ்சள் தூள், அரைத்த மிளகு, 1/4 தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை நறுக்கிய வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  3. முட்டைகளை அடித்துக் கொள்ளவும்; நறுக்கிய வெங்காயம், மிளகாய் மற்றும் மசாலா கலவை சேர்த்துக் கொள்ளவும். நன்றாக அடிக்கவும்.
  4. கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும்.
  5. முட்டை கலவையை இரண்டாக பிரித்துக் கொள்ளவும்.
  6. பாதி முட்டை கலவையை கடாயில் ஊற்றவும்.
  7. இரு புறமும் பொரிக்கவும். கவனமாக பொரிக்கவும்.
  8. ஆம்லேட் தயாரானதும், 4-6 முக்கோண துண்டுகளாக வெட்டி பாசி பருப்பு ஆணம் இருக்கும் பாத்திரத்தில் போடவும்.
  9. அனைத்து முட்டை கலவைகளுக்கும் இதே முறைகளை பின்பற்றவும்.

பொரிக்கும் முறை:

  1. சிறிய கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றவும்.
  3. எண்ணெய் சூடானதும், கருவேப்பிலை மற்றும் அரைத்த சோம்பு சேர்த்து வறுக்கவும்.
  4. அரை நிமிடம் வறுத்து அடுப்பை அணைக்கவும்.
  5. இதை பாசி பருப்பு ஆணம் இருக்கும் பாத்திரத்தில் சேர்க்கவும்.
  6. நெய், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
  7. நன்றாக கலக்கி, மூடி வைத்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
  8. முட்டை பருப்பாணம் சாப்பிடத் தயார்

குறிப்புகள் : இது சாதம் மற்றும் சிக்கன் சேர்வா,இறால் மசாலா,கார மீன் வறுவல்,மட்டன் சேர்வா,மிளகு-சீரக மட்டன் மசாலா,காரட் சாலட் ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது. காய்கறி பருப்பாணம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

மற்ற பெயர்கள் : Muttai paruppanam


 

இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.




 

அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (178)

By continuing to use the site, you agree to the use of cookies. more information

The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

Close