பூரி
குழந்தைகளுக்கு பிடித்த பூரியை வீட்டில் சுலபமாக செய்யலாம்.
Posted by
ShareRecipes Staff
26/05/2014
Click to rate this post!
[Total: 0 Average: 0]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 20-30 நிமிடங்கள்
செய்கிறது : 20 - 25
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
Indian breakfast
தேவையான பொருட்கள் :
- ஆட்டா (கோதுமை மாவு) – 2 கப்
- மைதா மாவு – 2 கப்
- ரவை – 2 மேசைக்கரண்டி (விரும்பினால்)
- சர்க்கரை – 1 தேக்கரண்டி (விரும்பினால்)
- எண்ணெய் – பொரிக்க
- தண்ணீர் – தேவைக்கேற்ப
முறை :
- ஆட்டா, மைதா, ரவை, சர்க்கரை மற்றும் உப்பை ஒரு பாத்திரத்தில் ஒன்றாக சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து, மிருதுவாக, உருண்டை பிடிக்கும் பதத்தில் பிசையவும்.
- போதுமான நேரம் இருந்தால், 15 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
- 3-4cm அளவு பந்துகளாக உருண்டை பிடித்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- ஒவ்வொரு உருண்டையையும் எண்ணெய் தேய்த்து தட்டையாக தேய்த்துக் கொள்ளவும்.
- இவற்றை எண்ணெயில் போட்டு, இரு புறமும் உப்பும் வரை நன்றாக பொரிக்கவும்.
குறிப்புகள் : உருளைக்கிழங்கு மசாலா, சன்னா மசாலா அல்லதுபருப்பு ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது.
மற்ற பெயர்கள் : poori
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு