இறால்ஆணம்
எளிதாக செய்யப்படும் இந்த இறால் ஆணத்தை ஆப்பம் அல்லது தோசையுடன் சாப்பிடலாம்.
Posted by
ShareRecipes Staff
26/05/2014
Click to rate this post!
[Total: 2 Average: 5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 5-6
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
prawns
பிரதான மூலப்பொருள் :
கடல்வாழ்வன
தேவையான பொருட்கள் :
- ஓடு நீக்கிய இறால் - 25௦ கிராம்
- வெங்காயம் - 1 நடுத்தர அளவு
- தக்காளி - 2 நடுத்தர அளவு
- உருளைக்கிழங்கு - 1 நடுத்தர அளவு அல்லது கத்தரிக்காய்- 4-5 சிறியது
- இஞ்சி-பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 1-2 தேக்கரண்டி
- மிளகு தூள் -1 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் -1
- டின் தேங்காய் பால் - 3 மேசைக்கரண்டி அல்லது
- 150ml வீட்டில் செய்த தேங்காய்ப்பால்
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
- உப்பு – சுவைக்கேற்ப
- தண்ணீர் - தேவையான அளவு
முறை :
- வெங்காயம், தக்காளி, மிளகாய், கொத்தமல்லி இலை எல்லவற்றையும் வெட்டி கொள்ளவும். பின்னர் உருளைக்கிழங்கு அல்லது கத்தரிக்காயை நீட்டமாக வெட்டி கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய்யை ஊற்றி மிதமான சூட்டில் சூடு பண்ணவும்.
- அதனுடன் வெங்காயத்தை சேர்த்து 3-4 நிமிடம் வதக்கவும்.
- இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
- பின்னர் கத்தரிக்காய் அல்லது உருளைக்கிழங்கை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
- அதனுடன் நறுக்கிய தக்காளி, மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பை சேர்க்கவும்.
- 1 கப் தண்ணீரை சேர்த்து உருளைக்கிழங்கு அல்லது கத்தரிக்காய் நன்கு வேகும்வரை சமைக்கவும்.
- பின்னர் இறால் சேர்த்து 1-2 நிமிடம் சமைக்கவும்.
- தேங்காய் பால் சேர்த்து சில நிமிடங்கள் சூடு பண்ணவும்.
- கொத்தமல்லி இலையை தூவி அலங்கரிக்கவும்.
குறிப்புகள் : இதனை சப்பாத்தி, ஆப்பம் அல்லது தோசையுடன் சாப்பிடலாம். மாறுதலுக்கு மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு செய்து பார்க்கலாம்.
மற்ற பெயர்கள் : prawn curry, raal aanam
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு