தக்காளி சாதம்

சமைத்த உணவை தக்காளி மற்றும் மசாலாக்கள் சேர்த்து சுவையான கட்டுச் சோறாக செய்து சாப்பிடலாம்.

Posted by ShareRecipes Staff
19/03/2014

Click to rate this post!
[Total: 1 Average: 5]
Please rate it

தயாரிப்பு நேரம் : 5 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 10 நிமிடங்கள்

செய்முறை புகைப்படத்தைப் பதிவேற்றுக


பிரதான மூலப்பொருள் : அரிசி
செய்முறை வகை : மதிய உணவு

தேவையான பொருட்கள் :

 

  • 3 கப் சமைத்த சாதம்
  • 2 மேசைக் கரண்டி நறுக்கிய வெங்காயம்
  • 4 தக்காளி
  • 3 மேசைக் கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி கடலைப் பருப்பு (விரும்பினால்)
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 காய்ந்த மிளகாய்
  • 1 மேசைக்கரண்டி கடலைப் பருப்பு (விரும்பினால்)
  • 1/8 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • மிதமான காரத்திற்கு 1/2 தேக்கரண்டி அல்லது அதிக காரத்திற்கு 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  • 1/2 தேக்கரண்டி சோம்பு (விரும்பினால்)
  • 1 தேக்கரண்டி தக்காளிக் கூழ் (puree) (விரும்பினால்)

முறை :
  1. வெங்காயம் மற்றும் தக்காளியை நன்றாக நறுக்கிக் கொள்ளவும். சோம்பு சேர்க்க விரும்பினால் 1/2 தேக்கரண்டி சோம்பை அரைத்து கொள்ளவும்.
  2. சமைத்த சாதம் ஆறி இருந்தால் சூடு படுத்திக் கொள்ளவும். அதை கலக்குவதற்கு வசதியாக அகலமான பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
  3. 1 லிட்டர் அளவு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேற்றி, எண்ணெய் ஊற்றவும்.
  4. எண்ணெய் சூடானவுடன், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் மற்றும் கடலைப் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும்.
  5. மஞ்சள்த் தூள், மிளகாய்த் தூள், சோம்பு, நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியைச் சேர்க்கவும். சாதம் சற்று புளிப்பாக இருக்க விரும்பினால், சிறிது தக்காளி கூழ் சேர்க்கவும்.
  6. எண்ணெய் தனியாக பிரிந்து, தக்காளி நன்றாக வேகும் வரை நன்றாக வதக்கி,அடுப்பை அணைக்கவும்.
  7. இந்த கலவையை சமைத்த சாதத்தில் சேர்த்து,நன்றாக கலக்கவும்.
  8. சுவையான தக்காளி சாதம் தயார்.

குறிப்புகள் : இதை உருளைக் கிழங்கு பொரியல், இறால் வறுவல் அல்லது மீன் வறுவல்ஆகியவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.

மற்ற பெயர்கள் : Tomato Rice


 

இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.




 

அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (178)

By continuing to use the site, you agree to the use of cookies. more information

The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

Close