மூணு காய் பொரியல்
மூணு காய் பொரியல், வேர் காய்கறிகள் மற்றும் இந்திய மசாலாக்கள் ஆனது. சாதத்துடன் சுவைக்கத்தக்கது
Posted by
ShareRecipes Staff
15/05/2014
Click to rate this post!
[Total: 0 Average: 0]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10-15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 20-30 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 5-6
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»கூடுதல் உணவு»
குறிச்சொற்கள் :
Beetroot, Carrot, potatoes, South Indian Vegetarian
தேவையான பொருட்கள் :
- உருளைக் கிழங்கு நடுத்தர அளவு – 2
- காரட் சிறியது – 2
- பீட்ரூட் சிறியது – 2
- பச்சை பீன்ஸ் – 5௦ கிராம் (விரும்பினால்)
- உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
- கருவேப்பிலை – சிறிதளவு
- தேங்காய்த் துருவல் – 1-2 தேக்கரண்டி (விரும்பினால்)
- சமையல் எண்ணெய் – 5 தேக்கரண்டி
- உப்பு – தேவைகேற்ப
மசாலாத் தூள்:
- மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மிதமான காரத்துக்கு அல்லது
- 2 தேக்கரண்டி அதிக காரத்துக்கு
- ஜீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
முறை :
- காய்கறிகளைக் கழுவி 1/2 cm அளவு சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பீன்சை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய்யை சூடாக்கவும்.
- ஒரு நிமிடம் கழித்து, உளுத்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலையை சேர்த்து வறுக்கவும்.
- பீட்ரூட் துண்டுகள் மற்றும் 1/8 தேக்கரண்டி உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும்.
- மூடி வைத்து 5 நிமிடங்கள் சமைக்கவும்.
- மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, உருளைக்கிழங்கு, காரட் மற்றும் பீன்ஸ் சேர்க்கவும். சில நிமிடங்கள் கிளறவும்.
- மூடி வைத்து, காய்கறிகள் வேகும் வரை சமைக்கவும். இதற்கு 15 நிமிடங்கள் ஆகலாம். அவ்வப்போது மூடியைத் திறந்து காய்கறிகளை கிளறி விடவும்.
- காய்கறிகள் வெந்தவுடன் ஜீரகத் தூள் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வறுக்கவும்.
- தயாரானதும் பரிமாறவும்.
- தேங்காய்த் துருவல் தூவி அலங்கரிக்கவும்.
குறிப்புகள் : இது சாதம் மற்றும் சாம்பார்/பருப்பாணம்/ரசம்/பருப்பு ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது.
மற்ற பெயர்கள் : vegetables stirfry
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு