புர்த்தா
கத்திரிக்காயைக் கொண்டு தயாரிக்கப்படும் புளிப்பான குழம்பாகும்.
Posted by
ShareRecipes Staff
10/02/2014
Click to rate this post!
[Total: 0 Average: 0]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 5-6
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
Brinjal, Muslim Meal
பிரதான மூலப்பொருள் :
காய்கறி
செய்முறை வகை :
மதிய உணவு விருந்து உணவு
தேவையான பொருட்கள் :
- கத்திரிக்காய் - 300 கிராம்
- தக்காளி - 150 கிராம் அல்லது 2
- வெங்காயம் - 100 கிராம் அல்லது 1 சிறியது
- காய்ந்த சிவப்பு மிளகாய் -1
- பச்சை மிளகாய் - 1
- பூண்டு - 2 பல்லு
- புளி - 2 கோலிகுண்டு அளவு
- தண்ணீர் - 100 மிலி
- மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன் (தேவைப்பட்டால்)
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - சுவைக்கேற்ப
முறை :
- தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
- பூண்டின் தோலை உரித்துக் கொள்ளவும்.
- வெதுவெதுப்பான தண்ணீரில் புளியை 5-6 நிமிடங்களுக்கு ஊறவைத்து, பின்னர் நன்றாக பிழிந்து, புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பிரஷர் குக்கர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி 2 டேபில் ஸ்பூன் எண்ணெய்யை விடவும்.
- அதில் வெங்காயம் மற்றும் புண்டை போட்டு 2-3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- தக்காளி மற்றும் கத்திரிக்காயை போட்டு 2-3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, புளி கரைத்த தண்ணீர் மற்றும் உப்பை சேர்க்கவும்.
- ** நடுத்தரமான சூட்டில் இரண்டு விசில் வரும் வரை வைத்து பின்னர் அடுப்பை அனைக்கவும். பிரஷர் முற்றிலும் குறைந்த பின்னர் மூடியைத் திறக்கவும்.
- பின்னர் அதை நன்றாக மசிக்கவும்.
- வேறு ஒரு சட்டியை அடுப்பில் வைத்து மீதமிருக்கும் எண்ணெய்யை விடவும்.
- கடுகு, உளுந்தம்பருப்பு, சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
- இதை மசியலில் சேர்க்கவும்.
- பின்னர் அதன் மீது கறிவேப்பிலையை தூவவும்
குறிப்புகள் : பருப்பு சாதம், இறால் மசாலா, சிக்கன் ஷேர்வா அல்லது ஆட்டுக்கறி மசாலா ஆகியவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
மற்ற பெயர்கள் : Burtha
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு