சிக்கன் ஷேர்வா
இதில் உள்ள சிக்கன் துண்டுகள் சிக்கன் பிரியர்களுக்கு பிடித்த வகையில் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.
Posted by
ShareRecipes Staff
13/03/2014
Click to rate this post!
[Total: 1 Average: 5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 30-45 நிமிடங்கள்
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
chapati side dish, Chicken
பிரதான மூலப்பொருள் :
கோழி இறைச்சி
செய்முறை வகை :
மதிய உணவு
தேவையான பொருட்கள் :
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மிதமான காரத்திற்கு அல்லது 2 தேக்கரண்டி அதிக காரத்திற்கு
- கோழிக்கறி – 500 கிராம்
- வெங்காயம் – 300 கிராம்
- தக்காளி - 4
- இஞ்சி-பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 2
- பட்டை - 1 ½ நீண்ட துண்டு
- கொத்தமல்லி இலைகள் - சில
- எண்ணெய் - 4 மேசைக்கரண்டி மற்றும் 1 தேக்கரண்டி
- உப்பு - சுவைக்கேற்ப
- தண்ணீர் - தேவையான அளவு
மசாலா பொடிகள்
முறை :
- வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள் ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து, 4 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் பட்டையையும் வெங்காயத்தையும் சேர்த்து சில நிமிடங்களுக்கு வறுக்கவும்.
- இஞ்சி - பூண்டு விழுதை அத்துடன் சேர்த்து சுமார் ஒரு நிமிடத்துக்கு வதக்கவும்.
- தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து சுமார் 4-5 நிமிடங்கள் கிளரவும்.
- கோழித் துண்டுகளை சேர்த்து, கிளறிக்கொண்டே மேலும் 2-3 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
- ½ கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, கடாயை மூடி, கோழித் துண்டுகளை முதல் 5 நிமிடங்களுக்கு மிதமான வெப்பத்திலும் பிறகு சுமார் 15-20 நிமிடங்களுக்கு குறைந்த வெப்பத்திலும் சமைக்கவும்.
- ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கு ஒரு முறை கிளறிக்கொண்டே அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும் .
- சாறு நன்றாக அடர்த்தியாகும் வரை மேலும் கொஞ்ச நேரத்திற்கு கொதிக்க வைக்கவும். குழம்பு கடாயின் கீழே ஒட்டிக்கொள்ளத் தொடங்குவது போல் இருந்தால் சுமார் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும்.
- கொத்தமல்லி இலைகளைக் கொண்டு அழகுபடுத்தவும்
குறிப்புகள் : இந்த டிஷ் சாதம் மற்றும் சாம்பார் அல்லது சப்பாத்தி / நாண் உடன் சுவையாக இருக்கும். மாற்றத்திற்கு பசலிக் கீரை கோழிக்கறி மசாலா , சிக்கன்-பீன்ஸ் கறி அல்லது ஆட்டிறைச்சி மசாலாவை முயற்சிக்கலாம். சமையல் நேரம் தொடர்பான எச்சரிக்கையை தயவு செய்து பார்க்கவும்
மற்ற பெயர்கள் : Chicken masala, kozhi masala
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு