பருப்பு சாதம்
பருப்பு சோறு விடுமுறை நாட்களில் ஸ்பெசலாக அல்லது விருந்தினர்களுக்கு செய்யப்படும் சுவையான உணவாகும்.
Posted by
ShareRecipes Staff
10/02/2014
Click to rate this post!
[Total: 1 Average: 5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
மரினேஷன் நேரம் :10-20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 30-45 நிமிடங்கள்
செய்கிறது : 3 - 4
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
Biriyani, Indian Special Occasion, Muslim Meal
பிரதான மூலப்பொருள் :
அரிசி பருப்பு / கடலை
செய்முறை வகை :
மதிய உணவு விருந்து உணவு
தேவையான பொருட்கள் :
- பாசுமதி அரிசி - 400 கிராம்
- பாசிப்பருப்பு - 125 கிராம்
- எண்ணெய் - 3 tblsp
- பட்டை - 1 சிறியது
- ஏலக்காய் - 1 (தேவைப்பட்டால்)
- கிராம்பு - 2
- வெங்காயம் - 100 கிராம்
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 1
- இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
- புதினா - 1 கொத்து
- நெய்/வெண்ணெய் - 1 டீஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
முறை :
- வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்,
- அரிசி மற்றும் பருப்பை ஒரு பெரிய பாத்திரத்தில் 10-15 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.
- சட்டி ஒன்றை அடுப்பில் வைத்து மிதமாக சூடுபடுத்தி அதில் எண்ணெய் விடவும்.
- பட்டை மற்றும் கிராம்பை அதில் போட்டு வறுக்கவும்.
- வெங்காயம், மிளகாய் இஞ்சி பூண்டு விழுது மற்றும் புதினாவை போட்டு 3-4 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- தக்காளி, அரிசி மற்றும் பருப்பை அதில் போட்டு 3-4 நிமிடங்களுக்கு வறுக்கவும்.
- பின்னர் 950 மில்லி தண்ணீரை அதில் ஊற்றி உப்பை போடவும்.
- தண்ணீர் கொதிக்க துவங்கும்போது அடுப்பின் வேகத்தை தணிக்கவும்.
- சட்டியை மூடி வைத்து 15-20 நிமிடங்களுக்கு அல்லது தண்ணீர் வற்றும் வரை வேக வைக்கவும். ரைஸ் குக்கர் இருந்தால் அதில் சமைக்கவும்.
குறிப்புகள் : புர்தா , Raitha and இறால் மசாலா/சிக்கன் ஷேர்வா /ஆட்டுக்கறி மசாலா
ஆகியவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
மற்ற பெயர்கள் : paruppu soru
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு