புடலங்காய் பொரியல்
புடலங்காய் பொரியல் தென்னிந்திய குழம்புகளுக்கு நல்ல சைடு-டிஷ்.
Posted by
ShareRecipes Staff
27/05/2014
Click to rate this post!
[Total: 3 Average: 2.3]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 10-15 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 3-4
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»கூடுதல் உணவு»
குறிச்சொற்கள் :
Marrow, South Indian Vegetarian
தேவையான பொருட்கள் :
- புடலங்காய் – 1 சிறியது அல்லது 250 கிராம்
- மஞ்சள் தூள் – சிட்டிகை
- காய்ந்த மிளகாய் – 1 மிதமான காரத்திற்கு அல்லது 2 அதிக காரத்துக்கு
- துருவிய தேங்காய் – 1 மேசைக்கரண்டி (விரும்பினால்)
- ஜீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
- கருவேப்பிலை – சில
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
- நறுக்கிய வெங்காயம் – 1 மேசைக்கரண்டி (விரும்பினால்)
- உப்பு – சுவைக்கேற்ப
முறை :
- காயை சீவி, வெட்டி, விதிகளை நீக்கி 1cm துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து காயை பாதி வேக வைக்கவும்.
- ஒரு கடாயை சூடாக்கவும்.
- எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் மற்றும் கருவேப்பிலையை தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும், வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும்.
- சமைத்த காய், மஞ்சள் தூள், ஜீரகத் தூள் சேர்த்து சில நிமிடங்கள் சமைக்கவும்.
- கடாயை மூடி மிதமான சூட்டில் 5-6 நிமிடங்கள் சமைக்கவும்.
- மூடியைத் திறந்து அவ்வப்போது கிளறி, போதுமான தண்ணீர் உள்ளதா என சரி பார்க்கவும்.
- துருவிய தேங்காய் கொண்டு அலங்கரிக்கவும்.
குறிப்புகள் : இந்த பொரியல் சாதம் மற்றும் சாம்பார்,ரசம், பருப்பு, முட்டை புளி குழம்பு, முட்டை ஆம்லேட் புளி குழம்பு or பூண்டு குழம்பு ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ள ஏற்றது. மாற்றத்துக்கு சுரைக்காய் பொரியல் முயற்சிக்கலாம்.
மற்ற பெயர்கள் : marrow stirfry. Pudanlangaai poriyal
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு