முருங்கக்காய் இறால் கூட்டு
முருங்கக்காயை இறாலுடன் சேர்த்து சமைத்தால் மிக சுவையாக இருக்கும்.
Posted by
ShareRecipes Staff
03/03/2014
Click to rate this post!
[Total: 0 Average: 0]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 10-15 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 3-4
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»கூடுதல் உணவு»
குறிச்சொற்கள் :
Seafood, South Indian
பிரதான மூலப்பொருள் :
கடல்வாழ்வன காய்கறி
செய்முறை வகை :
மதிய உணவு
தேவையான பொருட்கள் :
- முருங்கைக்காய் - 3
- வெங்காயம் - 1 சிறியது
- தக்காளி - 1
- தக்காளி பூரி (puree) - 1 டீஸ்பூன் (விரும்பினால் )
- மஞ்சள் தூள் - 1/8 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- இறால் - 50 கிராம்/முட்டை 1
- பச்சை மிளகாய் - 1 (விரும்பினால் )
- எண்ணெய் - 3 டேபில் ஸ்பூன்
- பட்டை - 1" நீட்டமான துண்டு
- தேங்காய் பால் - 2 டேபில் ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - சுவைகேற்ப
முறை :
- தக்காளியையும் வெங்காயத்தையும் நறுக்கவும். முருங்கக்காயை இரண்டு அங்குளமாக நறுக்கிக்கொள்ளவும்.
- கடாயை சூடுபடுத்தி எண்ணெயை ஊற்றவும்.
- கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாயை சேர்த்து 1-2 நிமிடம் வரை கிளறவும்.
- 5-6 இறால் சேர்த்து கிளறவும்.
- தக்காளி பூரி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
- உப்பு மற்றும் 3/4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
- குறைந்த சூட்டில் காய் வேகும்வரை மூடி சமைக்கவும். சமைக்கும் போது ஓரிரு முறை மூடியை திறந்து போதுமான தண்ணீர் உள்ளதா என்று சரிபார்க்கவும்.
- மீதமுள்ள இறால் மற்றும் தேங்காய் பால் சேர்த்து 2-3 நிமிடம் கொதிக்க வைக்கவும்
குறிப்புகள் : இதை சாதத்துடன் சாம்பார் ,ரசம், பருப்பு ஆனம் , பருப்பு, முட்டை புளிக்குழம்பு, முட்டை ஆம்பலெட் புளிக்குழம்புமற்றும் பூண்டு குழம்பு ஆகியவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும் .
மாற்றத்துக்கு கோவைக்காவை பொரியல், சொரக்காய் கூட்டு அல்லதுபீன்ஸ் இறால் கூட்டு செய்து பார்க்கலாம்.
மற்ற பெயர்கள் : Murungakkai raal pirattal
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு