காலிஃபிளவர் கைமா
காலிஃபிளவர் என்பது காய்கறிகள், மாமிசத் துண்டுகள் மற்றும் இந்திய மசாலாக்களை பயன்படுத்தித் தயாரிக்கப் படும் இது எல்லா வகை குழம்பிற்கும் தொட்டுக் கொள்ள ஏற்றது.
Posted by
ShareRecipes Staff
20/03/2014
Click to rate this post!
[Total: 1 Average: 4]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 10-15 நிமிடங்கள்
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»கூடுதல் உணவு»
பிரதான மூலப்பொருள் :
ஆட்டு இறைச்சி காய்கறி
செய்முறை வகை :
மதிய உணவு
தேவையான பொருட்கள் :
- 250 கிராம் அல்லது ½ நடுத்தர அளவு காலிஃபிளவர்
- 100 கிராம் கைமா (கொத்து இறைச்சி)
- 150 3 மேசைக்கரண்டி வெங்காயம்
- 2 தக்காளி
- 1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது
- 1/4 தேக்கரண்டி மஞ்சள்த் தூள்
- 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள் (காரம் தேவைப்பட்டால் 2 தேக்கரண்டி)
- 1 பச்சை மிளகாய்
- 1 இஞ்ச நீள இலவங்கப் பட்டை
- 50 மில்லி தேங்காய்ப் பால்
- 2 தேக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி இலை
- 3 மேசைக்கரண்டி எண்ணெய்
- தேவைக்கேற்ப தண்ணீர்
- சுவைக்கேற்ப உப்பு
முறை :
- கீமாவை நன்றாக தண்ணீரில் கழுவி வடிகட்டிக் கொள்ளவும்; காய்கறி, தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்; பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
- கடாயை சூடாக்கி, 1 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் கீமாவை சேர்க்கவும்.
- தண்ணீர் முழுவதும் ஆவி ஆகும் வரை நன்றாக வேக வைக்கவும்.
- கடாயில் இருந்து தனியாக எடுத்து வைக்கவும்.
- பிரஷர் குக்கர் ஒன்றை சூடாக்கி மீதமுள்ள எண்ணெய் சேர்க்கவும்.
- இப்போது பட்டை மற்றும் வெங்காயம் சேர்த்து பழுப்பு நிறம் வரும் வரை வதக்கவும்.
- இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி மற்றும் அனைத்து மசாலாப் பொடிகளையும் சேர்க்கவும். நன்றாகக் கலக்கி 2-3 நிமிடங்கள் வரை சமைக்கவும்.
- கீமா, கால் கப் தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- 2 விசிகள் வரும் வரை (சுமார் 3 நிமிடங்கள்) நன்றாக குக்கரில் வேக வைக்கவும்.
- அழுத்தம் குறைந்த பிறகு குக்கரைத் திறக்கவும்.
- நறுக்கிய காய்கறிகளை கீமா கடாயில் போடவும். மறுபடியும் மூடி சுமார் 7-8 நிமிடங்கள் வரை சமைக்கவும். தண்ணீர் ஆவியாகும் வரை நன்றாக வேக வைக்கவும்.
- இப்போது தேங்காய்ப் பால் சேர்த்து 2-3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவிப் பரிமாறவும்.
குறிப்புகள் : இந்த உணவு சாதம் மற்றும்சாம்பார், பாசிப்பருப்புக் குழம்பு, ரசம், பருப்பு, முட்டைக் குழம்பு, ஆம்லெட் புளிக் குழம்பு அல்லது பூண்டுக் குழம்புஆகியவற்றுடன் சேர்த்து உண்ண சுவையாக இருக்கும். இதில் காலிஃபிளவர்க்குப் பதிலாக பீன்ஸ், முட்டைக் கோஸ், கேரட் அல்லது பட்டாணி சேர்த்தும் இந்த உணவைத் தயாரிக்கலாம். கீமாவிற்கு பதிலாக 2 முட்டையை அடித்து சேர்க்கலாம்.
மற்ற பெயர்கள் : Cauliflower kaima
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு