தக்காளி குருமா

தக்காளி குருமா தோசை/சப்பாத்திக்கு செய்யக்கூடிய ஒரு சுலபமான மற்றும் எளிமையான டிஷ்.

[Total: 11    Average: 3.3/5]
Please rate it


தயாரிக்கும் நேரம் : 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 10-15 நிமிடங்கள்

பரிமாறும் அளவு : 4-5

பின்னிணைப்பு(Tags) :
முக்கிய செய்பொருள் : காய்கறி
சமையல் குறிப்பு வகை : இரவு உணவு காலை உணவு

தேவை :
  • தக்காளி - 3
  • வெங்காயம் - 1 சிறியது
  • பச்சை மிளகாய் - 2
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • நறுக்கிய கொத்தமல்லி இலை - 1 மேசைக்கரண்டி
  • தக்காளி கூழ் (puree) - 1 தேக்கரண்டி ( விரும்பினால் )
  • தண்ணீர் - தேவைக்கேற்ப
  • உப்பு - சுவைக்கேற்ப

மசாலாத் தூள்::

  • மஞ்சள் தூள் -1/8 தேக்கரண்டி
  • மிளகாய்த் தூள் -3/4 தேக்கரண்டி
  • மல்லித் தூள் - 1 தேக்கரண்டி
  • வறுத்து அரைக்க வேண்டிய பொருட்கள்:

    • துருவிய தேங்காய் - 1 ½ மேசைக்கரண்டி
    • சோம்பு - 1/2 மேசைக்கரண்டி

    செய்முறை :
    1. துருவிய தேங்காய் மற்றும் சோம்பை வறுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
    2. கழுவிய கொத்தமல்லி இலை, வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்.
    3. ஒரு பாத்திரத்தை சூடாக்கி, எண்ணெய் விட்டு, அதில் வெங்காயம் சேர்த்து வறுக்கவும்.
    4. தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
    5. மசாலா தூள்கள் மற்றும் அரைத்த விழுதை சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும்.
    6. தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, சட்டியை மூடி 8-1௦ நிமிடங்கள் சமைக்கவும்.
    7. கறிவேப்பிலை அல்லது கொத்தமல்லி இலை சேர்த்து அலங்கரிக்கலாம்.

    குறிப்பு : 2-3 முட்டை பொத்து ஊற்றி முட்டை ஆனமாக சமைக்கலாம். அதிக சுவைக்கு, 2-3 முட்டைகளை உடைத்து, கடைசியில் சேர்த்து 1-2 நிமிடங்கள் கழித்து இறக்கி மற்றொரு முட்டை ஆனமாக சாப்பிடலாம்.

    ஆங்கில ஆக்கத்தின் தொடர்பு(Link) : http://www.sharerecipes.com/recipes/tomato-korma


     




     

    Leave a Reply

    Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

    தொடர்புடைய சமையல் குறிப்பு
    சமையல் குறிப்பை தேடுக
    பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (177)
    அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு

    By continuing to use the site, you agree to the use of cookies. more information

    The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

    Close