உருளைக்கிழங்கு பொரியல்

இந்திய மசாலா பொருட்களுடன் செய்யும் உருளைக் கிழங்கு பொரியல் எல்லாருக்கும் பிடித்தது.

[Total: 8    Average: 3.6/5]
Please rate it


தயாரிக்கும் நேரம் : 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்

பின்னிணைப்பு(Tags) : ,
முக்கிய செய்பொருள் : உருளைக்கிழங்கு
சமையல் குறிப்பு வகை : மதிய உணவு

தேவை :
  • உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
  • எண்ணெய் - 5 டீஸ்பூன்
  • கடுகு - 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து

மசாலா பொடிகள்

  • மஞ்சள் தூள் - 1/8 டீஸ்பூன்

  • செய்முறை :
    1. உருளை கிழங்கை நன்றாக கழுவி 1 செ.மீ. அளவுக்கு துண்டுகளாக நறுக்கவும்.
    2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றுடன் அதை 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.
    3. சட்டி ஒன்றை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி எண்ணெய் விடவும்.
    4. போதுமான அளவு எண்ணெய் சூடானவுடன் கடுகு மற்றும் கறிவேப்பிலையை போட்டு ஒரு நிமிடத்திற்கு தாளிக்கவும்.
    5. நறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு துண்டுகள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் 3/4 ஸ்பூன் உப்பு ஆகியவற்றை போடவும்.
    6. 4-5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
    7. சட்டியை மூடி வைத்து 7-8 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
    8. உருளைக்கிழங்கு துண்டுகள் சட்டியின் அடியில் ஒட்டிக் கொண்டு தீயாமல் இருக்கும் வகையில் சட்டியை சில முறை திறந்து நன்றாக கிளறி விடவும்.
    9. உருளைக் கிழங்கு வெந்தபின்னர் அவை மொறுமொறுப்பாகும் வகையில் 7-8 நிமிடங்களுக்கு வதக்கவும்.
    10. சட்டியின் அடியில் உருளை கிழங்கு தீயாமல் இருக்க நன்றாக கிளறவும்.

    குறிப்பு : எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம் மற்றும் தக்காளி சாதத்திற்கு இது தொட்டுக் கொள்ள ஏற்றது.

    ஆங்கில ஆக்கத்தின் தொடர்பு(Link) : http://www.sharerecipes.com/recipes/potato-fry


     




     

    Leave a Reply

    Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

    சமையல் குறிப்பை தேடுக
    பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (177)
    அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு

    By continuing to use the site, you agree to the use of cookies. more information

    The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

    Close