மட்டன் குழம்பு

பல வீடுகளில் வழக்கமாக சமைக்கப்படும் மட்டன் குழம்பு செய்யும் எளிய முறை இது.

[Total: 26    Average: 3.1/5]
Please rate it


தயாரிக்கும் நேரம் : 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 30-45 நிமிடங்கள்

பின்னிணைப்பு(Tags) :
முக்கிய செய்பொருள் : ஆட்டு இறைச்சி
சமையல் குறிப்பு வகை : மதிய உணவு

தேவை :
  • எலும்புடன் கூடிய மட்டன் – 6௦௦ கிராம் –
  • பெரிய துண்டுகளாக வெட்டியது
  • எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
  • பட்டை – 3 cm நீள துண்டு
  • கிராம்பு – 2
  • வெங்காயம் – 2 பெரியது
  • தக்காளி – 15௦ கிராம்
  • பச்சை மிளகாய் – 2
  • இஞ்சி-பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
  • டின் தேங்காய் பால் – 3 மேசைக்கரண்டி அல்லது
  • 200 மில்லி வீட்டில் செய்த தேங்காய் பால்
  • நறுக்கிய கொத்தமல்லி இலை – 1 தேக்கரண்டி
  • தண்ணீர் – தேவைக்கேற்ப
  • உப்பு – சுவைக்கேற்ப

மசாலா தூள்கள்:

  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1&1/2 -2 தேக்கரண்டி
  • மிளகு தூள் – 3/4 தேக்கரண்டி
  • மல்லித் தூள் – 3 தேக்கரண்டி
  • சீரகத் தூள் – 1 தேக்கரண்டி (விரும்பினால்)

செய்முறை :
  1. அனைத்து வெங்காயம், தக்காளி, மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கிக் கொள்ளவும்.
  2. பிரஷர் குக்கரை சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும்.
  3. எண்ணெய் சூடானதும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து 1/2 நிமிடம் வறுக்கவும்.
  4. நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 4-5 நிமிடங்கள் மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  5. மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  6. உப்பு மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும்.
  7. அனைத்து மசாலா தூள்கள் மற்றும் ஆட்டு கறி துண்டுகளை சேர்த்து 4-5 நிமிடங்கள் வதக்கவும்.
  8. 200 மில்லி தண்ணீர் சேர்க்கவும்.
  9. மிதமான சூட்டில் அடுப்பை வைத்து சட்டியை மூடவும்.
  10. முதல் விசில் வந்தவுடன், அடுப்பைக் குறைத்து 15 நிமிடங்கள் பிரஷரில் சமைக்கவும்.
  11. டின் தேங்காய் பால் இல்லை எனில் வீட்டில் செய்த தேங்காய் பால் செய்யவும்.
  12. தேவைப்பட்டால் அதிகம் தண்ணீர் சேர்க்கவும். 4-5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  13. கொத்தமல்லி இலையால் அலங்கரிக்கவும்.

குறிப்பு : சாதம்/ சப்பாத்தி/ பரோட்டா அல்லது கோதுமை பிரட்டுடன் சாப்பிட ஏற்றது. கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, முருங்கைக்காய், முட்டைகோஸ், வெந்தய கீரை, சௌசௌ அல்லது ஏதேனும் ஒரு நீர் காய்கறியை கறி வெந்தவுடன் சேர்த்து 4-5 நிமிடங்கள் பிரஷர் குக்கரில் அல்லது காய் வேகும் வரை சமைக்கவும். பார்க்க சமையல் குறிப்பு.

மற்ற பெயர் : Lamb curry

ஆங்கில ஆக்கத்தின் தொடர்பு(Link) : http://www.sharerecipes.com/recipes/lamb-stew


 




 

Leave a Reply

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (177)
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு

By continuing to use the site, you agree to the use of cookies. more information

The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

Close