தேங்காய் பால் முட்டை குழம்பு என்பது தேங்காய் பால் குழம்பில் முட்டையை பொத்து ஊத்தி செய்யப்படும் சுவையான குழம்பாகும்.
Posted by
ShareRecipes Staff
29/04/2014
Click to rate this post!
[Total: 1 Average: 4]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
Coconut milk, Egg
தேவையான பொருட்கள் :
- முட்டை – 4
- எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
- இலவங்க பட்டை – 4 cm நீள சன்னத் துண்டு
- கிராம்பு – 4
- ஏலக்காய் – 1
- வெங்காயம் – 2 சிறியது
- பச்சை மிளகாய் – 3 மிதமான காரத்திற்கு அல்லது 4 அதிக காரத்திற்கு
- இஞ்சி-பூண்டு விழுது – 1 ½ தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
- சீரக தூள் – 1 தேக்கரண்டி
- சோம்பு தூள் – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)
- எலுமிச்சை சாறு – 2 மேசைக்கரண்டி
- கெட்டியான டின் தேங்காய் பால் – 7 மேசைக்கரண்டி அல்லது 35௦ மில்லி
- வீட்டில் செய்த தேங்காய் பால்
- நறுக்கிய கொத்தமல்லி இலை – 1 தேக்கரண்டி அலங்கரிக்க
- தண்ணீர் – தேவைக்கேற்ப
- உப்பு – சுவைக்கேற்ப
முறை :
- வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயை வெட்டிக் கொள்ளவும்.
- ஒரு கடாயை சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் சூடானதும், பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து 1/2 நிமிடம் வறுக்கவும்.
- நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை கலக்கவும்.
- மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடங்கள் வறுக்கவும்.
- மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் சோம்பு தூள் சேர்த்து 1 நிமிடம் கலக்கவும்.
- உப்பு, 2 கப் தண்ணீர், தேங்காய் பால் சேர்க்கவும். வீட்டில் தயாரித்த தேங்காய் பால் சேர்த்தால் தண்ணீரின் அளவைக் குறைத்துக் கொள்ளவும்.
- எலுமிச்சை சாறு சேர்த்து மூடி வைத்து 4-5 நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
- அடுப்பை நிறுத்தவும்.
- முட்டையை உடைத்து ஒரு ஆப்பையில் ஊற்றி கடாயில் ஊற்றவும்.
- மேலே உள்ள செய்முறையை எல்லா முட்டைகளுக்கும் பின்பற்றவும். முட்டையை ஒன்றின் மீது ஒன்று ஊற்றாமல் பார்த்துக் கொள்ளவும்.
- மூடி வைத்து 4-5 நிமிடங்கள் சமைக்கவும்.
- நறுக்கிய கொத்தமல்லி இலையால் அலங்கரிக்கவும்.
- தேங்காய் பால் முட்டை குழம்பு பரிமாறத் தயார்.
குறிப்புகள் : சாதம்/சப்பாத்தி/ பரோட்டா அல்லது கோதுமை/மைதா தோசை ஆகியவற்றுக்கு பொருந்தும். பச்சை முட்டைக்கு பதிலாக வேக வைத்த முட்டையை பயன் படுத்தலாம்.
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு