Click to rate this post!
[Total: 2 Average: 4.5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 20-30 நிமிடங்கள்
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
Biriyani, Indian Special Occasion
பிரதான மூலப்பொருள் :
அரிசி
செய்முறை வகை :
இரவு உணவு மதிய உணவு விருந்து உணவு
தேவையான பொருட்கள் :
- பாஸ்மதி அரிசி - 750 கிராம் அல்லது 3 கப்
- எண்ணெய் - 100 மி.லி அல்லது 6 டேபில் ஸ்பூன்
- பட்டை 1" நீட்டமான துண்டு - 1
- ஏலக்காய் - 1 (விரும்பினால் )
- கிராம்பு - 2
- வெங்காயம் - 150 கிராம் அல்லது 1 பெரியது
- தக்காளி - 75 கிராம் அல்லது 1
- பச்சை மிளகாய் - 1
- இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- நறுக்கிய கொத்துமல்லி இலை - 1 டேபில் ஸ்பூன்
- நறுக்கிய புதினா இலை- 1 டேபில் ஸ்பூன்
- நெய் அல்லது வெண்ணெய் - 2 டீஸ்பூன் அல்லது 10 கிராம்
- தண்ணீர் - தேவையான அளவு
முறை :
- வெங்காயம், தக்காளி, மிளகாய், கொத்துமல்லி இலை மற்றும் புதினா தழைகளை நறுக்கிக் கொள்ளவும்.
- அரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு நன்றாக கழுவி 10 நிமிடங்களுக்கு ஊறவைத்து வடிகட்டவும்.
- சட்டியை அடுப்பில் வைத்து லேசாக சூடுபடுத்தி அதில் எண்ணெய் விடவும்.
- பட்டை மற்றும் கிராம்பை போட்டு வறுக்கவும்.
- வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை போட்டு 3-4 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- தக்காளி மற்றும் இஞ்சி-பூண்டு விழுது அதில் போட்டு நன்று வதக்கவும்.
- பின்னர் அரிசியை அதில் போட்டு 4-5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
- 1 லிட்டர் 150 மி.லி(4 கப் மற்றும் 2/3 கப் ) தண்ணீர் விட்டு உப்பு போடவும்.
- தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பில் தீயின் வேகத்தை குறைத்து, மூடிவைத்து 15 -20 நிமிடங்களுக்கு அல்லது தண்ணீர் வற்றும் வகையில் வேக வைக்கவும்
குறிப்புகள் : இங்கு குறிப்பிட்டுள்ள தண்ணீர் அளவு ஒரு வழிகாட்டுதல் மட்டுமே! எந்த விதமான அரிசி மற்றும் பழயதா அல்லது புதியதா என்பதை பொருத்தே தண்ணீர் அளவை நிர்ணயிக்க முடியும்.
இதில் பட்டாணி, காளான் போன்ற காய்கறிகளை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
பட்டை சேர்க்கும் நேரத்தில் 2 டீஸ்பூன் சீரகம் சேர்த்தால் சீரக சாதமாகிவிடும்.
மற்ற பெயர்கள் : Pilau rice
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு