பாவக்காய் பொரியல்
Click to rate this post!
[Total: 2 Average: 3]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 10-15 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 3-4
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»கூடுதல் உணவு»
தேவையான பொருட்கள் :
- பாவக்காய் - 3
- மஞ்சள்தூள் - 1/8 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 1 1/ 2
- துருவிய தேங்காய் - 1 தேக்கரண்டி (தேவைப்பட்டால்)
- சீரக பொடி - 1/2 டீஸ்பூன் (விரும்பினால் )
- கறிவேப்பிலை - சிறிது
- நறுக்கிய வெங்காயம் - 1 டேபில் ஸ்பூன்
- சர்க்கரை - 2 டேபில் ஸ்பூன்
- தயிர் - 50 கிராம் அல்லது 3 டேபில் ஸ்பூன்
- தக்காளி ப்யூரி(Puree) - 1 டீஸ்பூன்
- எண்ணெய் - 4 டீஸ்பூன்
- கடுகு - 1/4 டீஸ்பூன்
- உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
முறை :
- பாவக்காயை குறுக்குவாட்டில் நறுக்கி, அதில் உள்ள விதைகளை அகற்றிவிட்டு சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.
- பாவக்காயின் கசப்பை போக்கும் வகையில் அதை தயிரில் போட்டு 30 நிமிடங்களுக்கு வைத்திருக்கவும்,
- சட்டியை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.
- எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை தாளிக்கவும்.
- கடுகு வெடித்தப் பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- நறுக்கப்பட்ட பாவக்காய் துண்டுகள், மஞ்சள் தூள், தக்காளி ப்யூரி, சர்க்கரை மற்றும் சீரக பொடியை அதில் போட்டு 2 நிமிடங்களுக்கு கிளறவும்.
- சட்டியை மூடி வைத்து 10-12 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
- பின்னர் சட்டியை திறந்து 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு மொறு மொறுப்பாகும் வகையில் 4 - 5 நிமிடங்களுக்கு வறுக்கவும்.
- பின்னர் அதில் தேங்காய் துருவலை தூவவும்
குறிப்புகள் : சாம்பார், பருப்பு ஆனம் , ரசம், பருப்பு, முட்டை குழம்பு, முட்டை ஆம்லெட் புளி குழம்பு அல்லது பூண்டு குழம்பு/a>
கலந்த சாதத்திற்கு பாவக்காய் கறி தொட்டுக் கொள்ள ஏற்றது.
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு