Click to rate this post!
[Total: 3 Average: 4.3]
Please rate it
சமைக்கும் நேரம் : 1 - 1 1/2 மணி நேரம்
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
Biriyani, Indian Special Occasion
பிரதான மூலப்பொருள் :
அரிசி ஆட்டு இறைச்சி
செய்முறை வகை :
மதிய உணவு விருந்து உணவு
தேவையான பொருட்கள் :
- எலும்புடன் கூடிய ஆட்டுக் கறி (நறுக்கியது) – 1&1/2கிலோ
- பாசுமதி அரிசி – 1 கிலோ
- எண்ணெய் – 225 மில்லி
- தயிர் – 6 மேசைக்கரண்டி
- வெங்காயம் – 5 நடுத்தர அளவு அல்லது 450 கிராம்
- பச்சை மிளகாய் – 10 மிதமான காரத்திற்கு அல்லது 15 அதிக காரத்திற்கு
- இஞ்சி-பூண்டு விழுது – 150 கிராம் அல்லது 6 மேசைக்கரண்டி
- நறுக்கிய புதினா இலை – 5 மேசைக்கரண்டி
- நறுக்கிய கொத்தமல்லி இலை – 5 மேசைக்கரண்டி
- மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
- பட்டை – 2 (1” நீள துண்டு)
- ஏலக்காய் – 3
- கிராம்பு – 3
- பிரியாணி இலை – 2-3 (விரும்பினால்)
- நெய் – 2 தேக்கரண்டி
- தண்ணீர் – தேவைக்கேற்ப
- குங்குமப் பூ – சிறிது (விரும்பினால்)
- பால் – 5 மில்லி (விரும்பினால்)
- எலுமிச்சை சாறு – 30மில்லி அல்லது 2 மேசைக்கரண்டி
- உப்பு – சுவைக்கேற்ப
முறை :
தயாரிக்கும் முறை
- வெங்காயம், தக்காளி மற்றும் புதினா, கொத்தமல்லி இலைகளை நறுக்கிக் கொள்ளவும்; பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
- இறைச்சியை கழுவிக் கொள்ளவும்.
குருமா செய்முறை:
- 5லிட்டர் பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும். 25 மில்லி எண்ணெய் மட்டும் சாதத்துக்கு வைக்கவும்.
- பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.
- நறுக்கிய வெங்காயத்தை எண்ணெயில் சேர்த்து மிதமான சூட்டில் அவை பொன்னிறமாகும் வரை சமைக்கவும்.
- மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
- நறுக்கிய தக்காளி, புதினா, கொத்தமல்லி இலைகள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 8-10 நிமிடங்கள் வதக்கவும்,
- தயிர் மற்றும் உப்பு சேர்த்து 1-2 நிமிடங்கள் கிளறவும்.
- ஆட்டுக் கறி துண்டுகளை சேர்த்து 4-5 நிமிடங்கள் கிளறவும்.
- 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். மூடி வைத்து முதல் விசில் வரும் வரை மிதமான சூட்டில் பிரஷரில் சமைக்கவும். முதல் விசில் வந்தவுடன் அடுப்பைக் குறைத்து 10-12 நிமிடங்கள் குறைவான தீயில் சமைத்து அடுப்பை நிறுத்தவும்.
சாதம் சமைக்க:
- அதே நேரத்தில் அரிசியை அலசி ஒரு பெரிய பாத்திரத்தில் 1௦ நிமிடங்கள் ஊற வைத்து வடிக்கவும்.
- நிறைய தண்ணீர் சேர்த்து, 25 மில்லி எண்ணெய், ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை சேர்த்து அதிக சூட்டில் சமைக்கவும்; தண்ணீர் அரிசியை விட 3-4 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
- தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசியை சேர்க்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து, 4-5 நிமிடங்கள் அல்லது 7௦% வேகும் வரை அதிக தீயில் வைக்கவும்.
- சாதத்தை வடிகட்டி தனியாக வைக்கவும்.
பிரியாணி சமைக்கும் முறை:
- குங்குமப் பூ சேர்ப்பதாக இருந்தால், அதை பாலில் ஊற வைக்கவும்.
- குருமாவை ஒரு லிட்டர் ஜாரில் அளக்கவும். இறைச்சியுடன் சேர்த்து குருமா 2 லிட்டர் இருக்க வேண்டும். குறைவாக இருந்தால் தண்ணீர் சேர்க்கவும்.
- 7-8லிட்டர் பாத்திரத்தில் சமைத்த குருமா மற்றும் பாதி வெந்த அரிசியையும் சேர்க்கவும்; ஒரு தேக்கரண்டி நெய் மற்றும் உப்பு போதவில்லை எனில் மேலும் உப்பு சேர்த்து கலக்கவும்.
- பாலில் ஊறிய குங்குமப் பூ மற்றும் எலுமிச்சை சாறை தெளிக்கவும்.
- மூடி வைத்து, ஒரு துணியால் நன்றாக மூடி, மிதமான சூட்டில் 2௦ நிமிடங்களுகளுக்கு சமைக்கவும். 20 நிமிடங்கள் ஆனவுடன் சட்டியை திறந்து லேசாக கிளறவும். மேலும் குறைந்த சூட்டில் 10 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
- சாதம் முழுமையாக வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
- மட்டன் பிரியாணி சாப்பிட தயார்.
- குறிப்பு:ஒரு பெரிய ரைஸ் குக்கர் இருந்தால், தயாரிக்கும் முறை, குருமா செய்யும் முறை ஆகியவற்றை செய்துவிட்டு, கீழ் கண்ட முறையை பின்பற்றவும்.
- அரிசியை கழுவி வடிக்கவும்.
- ரைஸ் குக்கரில், நெய், ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.
- குருமாவை ஒரு லிட்டர் ஜாரில் அளக்கவும். இறைச்சியுடன் சேர்த்து குருமா 2 லிட்டர் 500 மில்லி இருக்க வேண்டும். குறைவாக இருந்தால் தண்ணீர் சேர்க்கவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசியை சேர்க்கவும்.
- ரைஸ் குக்கரில் சமைத்த குருமாவை சேர்க்கவும். அது கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசியை சேர்க்கவும். எலுமிச்சை சாறு, பாலில் ஊறிய குங்குமப் பூ மற்றும் உப்பு சேர்க்கவும்.
- மூடி வைத்து ரைஸ் குக்கர் ஆஃப் ஆகும் வரை சமைக்கவும்.
குறிப்புகள் : அடுப்புத் தீயின் வேகம், மட்டன் புதியதா/ஐசில் வைத்ததா, எந்த நாட்டு கறி போன்ற பல காரணங்களால் சமையல் நேரம் மாறுபடும். இது சராசரி சமையல் நேரம் ஆகும்.
மற்ற பெயர்கள் : Lamb Biriyani
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு