தக்காளி சட்னி
Click to rate this post!
[Total: 16 Average: 3.3]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 10 நிமிடங்கள்
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»கூடுதல் உணவு»
பிரதான மூலப்பொருள் :
காய்கறி
செய்முறை வகை :
இரவு உணவு காலை உணவு சுவைச்சாறு(sauce) / சட்னி
தேவையான பொருட்கள் :
- தக்காளி - 300 கிராம் அல்லது 4
- வெங்காயம் - 100 கிராம் அல்லது 1 சிறியது
- காய்ந்த மிளகாய் – 3 மிதமான காரத்திற்கு அல்லது 4 அதிக காரத்திற்கு
- பூண்டு - 2 பல்லு
- உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி ( விரும்பினால் )
- கறிவேப்பிலை – 1 கொத்து
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உப்பு - சுவைக்கேற்ப
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
முறை :
- தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும். பூண்டை உரித்துக்கொள்ளவும்.
- பாத்திரத்தை சூடாக்கி ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். உளுந்து, வர மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
- வெங்காயம், பூண்டு சேர்த்து 2-3 நிமிடங்கள் வறுக்கவும்.
- அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்.
- அவற்றுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து மிருதுவான சட்னியாக அரைத்துக் கொள்ளவும்.
- சூடான கடாயில் மீதமுள்ள எண்ணெய் சேர்த்து, அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- அரைத்த சட்னி, உப்பு சேர்த்து சட்னி பதம் வரும் வரை கொதிக்க வைக்கவும்.
குறிப்புகள் : இட்லி/தோசையுடன் பரிமாறலாம். வர மிளகாய்க்கு பதிலாக 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள் சேர்க்கலாம். உளுத்தம் பருப்பிற்கு பதிலாக கடலை பருப்பு சேர்க்கலாம்.
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு