அவியல் என்பது வேக வைத்த காய்கறிகளுடன் தயிர் சேர்த்து தயாரிக்கப்படும் உணவாகும்.
Posted by
ShareRecipes Staff
22/01/2014
Click to rate this post!
[Total: 1 Average: 5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 10-15 நிமிடங்கள்
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»கூடுதல் உணவு»
குறிச்சொற்கள் :
கூட்டு, தமிழ்நாட்டு சைவ உணவு
பிரதான மூலப்பொருள் :
உருளைக்கிழங்கு காய்கறி
செய்முறை வகை :
மதிய உணவு
தேவையான பொருட்கள் :
- உருளைக்கிழங்கு -1 சிறியது
- கேரட் -1 சிறியது
- பீன்ஸ் - 50 கிராம் (விரும்பினால்)
- கத்தரிக்காய் - 75 கிராம்
- சொரக்காய் - 50 கிராம் (விரும்பினால்)
- வாழைக்காய் - 1 (விரும்பினால்)
- மாங்காய் - 2 1" துண்டு (விரும்பினால்)
- தயிர் - 100 மில்லி
- ஜீரகம் - 2 டீஸ்பூன்
- துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
- வரமிளகாய் - 2-3
- கறிவேப்பிலை - சிறிது
- கடுகு - 1 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 5 டீஸ்பூன்
- தண்ணீர் - தேவைக்கேற்ப
முறை :
- காய்கறிகளை சிறிய சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஜீரகம், மிளகாய் இரண்டையும் வறுத்து அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- காய்கறிகளுடன் சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும்.
- காய்கறிகள் வெந்தவுடன் தேங்காய் விழுதை சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
- இத்துடன் தயிரை சேர்த்து நன்கு கலக்கவும்.
- இந்த கலவையை அடுப்பிலிருந்து இறக்கவும்.
- வேறு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனை காய்கறிக் கலவையில் போட்டு அலங்கரிக்கவும்.
- இப்போது அவியல் தயார்.
குறிப்புகள் : காய்கறிகள் வேக எடுத்துக்கொள்ளும் நேரம் ஒவ்வொரு காய்கறிக்கும் வித்தியாசப்படுவதால், முதலில் உருளைக்கிழங்கு மற்றும் கேரட்இரண்டையும் வேகவிட்டு 7-8 நிமிடங்களுக்குப் பிறகு மற்றகாய்கறிகளையும் அதனுடன் சேர்த்து வேகவைக்கலாம்.
மற்ற பெயர்கள் : Avial
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு