கத்திரிக்காய் பச்சடி எல்லா வகை பிரியாணிக்கும் தொட்டுக் கொள்ள உகந்ததாகும்.
Posted by
ShareRecipes Staff
25/02/2014
Click to rate this post!
[Total: 2 Average: 1.5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 45-60 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 8-10
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
Brinjal, Indian Special Occasion, Pachadi
பிரதான மூலப்பொருள் :
காய்கறி
செய்முறை வகை :
மதிய உணவு விருந்து உணவு
தேவையான பொருட்கள் :
- கத்திரிக்காய் - 750 கிராம்
- வெங்காயம் - 250 கிராம் அல்லது 2 நடுத்தர அளவு
- தக்காளி - 300 கிராம் அல்லது 5 சிறியது
- பூண்டு - 4 பற்கள்
- மிளகு - 1/2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 1
- மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1_2 டீஸ்பூன்
- தக்காளி ப்யூரி(Puree) - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
- கறிவேப்பிலை - 1 கொத்து
- நிலக்கடலை - 30 கிராம்
- வெள்ளை எள் - 2 டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- சீனி - 1 டீஸ்பூன்
- நல்லெண்ணெய் - 20 மிலி
- சன்பிளவர் ஆயில் - 100 மிலி
- புளி - 1 ½" உருண்டை
- வெதுவெதுப்பான நீர் - 100 மிலி
- தண்ணீர் - தேவைக்கேற்ப
முறை :
- கத்திரிக்காயை 3 இஞ்ச் நீளம், 1 செமீ அகலமுள்ள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 50 மிலி வெதுவெதுப்பான நீரில் புளியை 5-6 நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
- புளியைக் கரைத்து, பிழிந்து, வடிகட்டி புளித்தண்ணீரை தனியாக வைத்துக் கொள்ளவும்.
- சன்பிளவர் எண்ணெயில் கத்தரிக்காய்களை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- கடுகு மற்றும் வெந்தயத்தை வாணலியில் எண்ணெய் விடாமல் 1-2 நிமிடங்களுக்கு வறுத்து, ஆறியதும் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
- நிலக்கடலையை தனியாக வாணலியில் எண்ணெய் விடாமல் பொன்னிறமாகும் வரை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
- அதேபோல் எள்ளையும் 1-2 நிமிடங்களுக்கு வறுத்து, நிலக்கடலையுடன் சேர்த்து தண்ணீர் விடாமல் கரகரப்பாக பொடி செய்து கொள்ளவும்.
- கத்திரிக்காயை பொரித்து எடுத்த அதே எண்ணெயில், கறிவேப்பிலை, மிளகு, பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
- பின்னர் அதனுடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தக்காளி ப்யூரி மற்றும் கடுகு, வெந்தயப் பொடி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து மேலும் 5-6 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- இப்போது அதனுடன் புளித்தண்ணீர், சீனி, உப்பு, மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- பொரித்து வைத்துள்ள கத்திரிக்காயை இதனுடன் சேர்த்து சில நிமிடங்கள் வேக விடவும்.
- காய் வெந்ததும் பொடி செய்து வைத்துள்ள நிலக்கடலை, எள் கலவையை சேர்க்கவும்.
- இறுதியில் நல்லெண்ணெய் சேர்த்து மேலும் 2-3 நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும்.
- கறிவேப்பிலை தூவி அலங்கரிக்கவும்,
மற்ற பெயர்கள் : Pulikathirikkai
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு