கீரை-சிக்கன் மசாலா

சப்பாத்திக்கு முக்கிய டிஷ்ஷாகவும் சாதத்துக்கு சைடு டிஷ்ஷாகவும் உள்ளது.

[Total: 2    Average: 4.5/5]
Please rate it


தயாரிக்கும் நேரம் : 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 20-30 நிமிடங்கள்

பின்னிணைப்பு(Tags) : ,
,
முக்கிய செய்பொருள் : கோழி இறைச்சி
சமையல் குறிப்பு வகை : இரவு உணவு மதிய உணவு

தேவை :
  • எலும்பில்லாத சிக்கன் – 300 கிராம்
  • கீரை - 300 கிராம்
  • வெங்காயம் - 150 கிராம் அல்லது 1 பெரியது
  • தக்காளி - 75 கிராம் அல்லது 1
  • இஞ்சி-பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 1 ( விரும்பினால் )
  • பட்டை – 1 " நீளத் துண்டு
  • கொத்தமல்லி இலை – சிறிதளவு
  • எண்ணெய் - 3 மேசைக்கரண்டி மற்றும் 1 மேசைக்கரண்டி இறுதியில்
  • தக்காளி கூழ் - 2 தேக்கரண்டி
  • உப்பு – சுவைக்கேற்ப
  • தண்ணீர் – தேவைக்கேற்ப

ஊறவைக்க தேவையான பொருட்கள்:

  • இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு / வினிகர் – 2 மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
  • உப்பு – 1/2 தேக்கரண்டி

மசாலாத் தூள்::

  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • மிளகாய்த் தூள்- 1 தேக்கரண்டி மிதமான காரத்திற்கு அல்லது 2 தேக்கரண்டி அதிக காரத்திற்கு
  • சீரகத் தூள் – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)

  • செய்முறை :
    1. ஊறவைக்க தேவையான பொருட்களின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிக்கனுடன் சேர்த்து கலக்கவும்.
    2. கீரையை அலசி நறுக்கவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை ஆகியவற்றை நறுக்கிக்கொள்ளவும். மிளகாய் சேர்ப்பதாக இருந்தால் அதை கீறிக் கொள்ளவும் .
    3. நான்-ஸ்டிக் பாத்திரத்தை சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும். அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து 2-3 நிமிடங்கள் வறுத்து தனியாக வைக்கவும்.
    4. கீரையை சில நிமிடங்கள் வறுத்து தனியாக வைக்கவும்.
    5. பாத்திரத்தில் பட்டை மற்றும் வெங்காயம் சேர்த்து பழுப்பு நிறம் வரும் வரை வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வறுக்கவும்.
    6. தக்காளி, மிளகாய், மசாலா தூள் சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும்.
    7. சிக்கன் துண்டுகள், கீரை, தக்காளி கூழ் ஆகியவற்றை சேர்த்து 4-5 நிமிடங்கள் மிதமான சூட்டில் சமைக்கவும்.
    8. குழம்பு கெட்டியாகும் வரை மிதமான தீயில் வைக்கவும். அடி பிடித்தால் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கிளறவும்.
    9. கொத்தமல்லி இலையால் அலங்கரிக்கவும்.

    குறிப்பு : சப்பாத்தி அல்லது நாணுடன் சுவைக்கத்தக்கது. மாறுதலாக, கீரை-மட்டன் மசாலா, சிக்கன்-பீன்ஸ் மசாலா அல்லது உருளைக்கிழங்கு-மட்டன் மசாலாவை முயற்சிக்கலாம்.

    ஆங்கில ஆக்கத்தின் தொடர்பு(Link) : http://www.sharerecipes.com/recipes/spinach-chicken-curry


     




     

    Leave a Reply

    Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

    சமையல் குறிப்பை தேடுக
    பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (177)
    அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு

    By continuing to use the site, you agree to the use of cookies. more information

    The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

    Close