சப்பாத்தி வட இந்தியாவில் மக்கள் தினமும் சாப்பிடும் ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவு ஆகும்.
Posted by
ShareRecipes Staff
11/03/2014
Click to rate this post!
[Total: 1 Average: 5]
Please rate it
சமைக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்
செய்கிறது : 15 - 20
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
chapati side dish, Indian bread
பிரதான மூலப்பொருள் :
கோதுமை / ரவை மாவு
தேவையான பொருட்கள் :
- கோதுமை மாவு (ஆட்டா) - 600 கிராம் + 100 கிராம்
- வெந்நீர் - 200 மி.லி
- சூடான பால் - 200 மி.லி
- உப்பு - சுவைக்கேற்ப
- சர்க்கரை - 1 தேக்கரண்டி
- எண்ணெய் - சிறிதளவு
முறை :
- ஒரு பரந்த கிண்ணத்தில் 500 கிராம் ஆட்டாவை எடுத்துக்கொள்ளவும்.
- பாலையும் தண்ணீரையும் கலந்து ஆட்டா கிண்ணத்தில் அதை சேர்க்கவும்.
- சிறிது உப்பு, சர்க்கரை சேர்க்கவும்.
- தேவைப்பட்டால் மீதமுள்ள 100 கிராம் ஆட்டாவையும் கொஞ்சம் தண்ணீரையும் சேர்த்துக்கொண்டு நன்றாக பிசைந்து; குறைந்தது 1 மணி நேரம் அதை ஒதுக்கி வைக்கவும்.
- சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மாவை சிறிய சிறிய பந்துகளாக (சுமார் 3 சென்டி மீட்டர் அளவுடைய பந்து) உருட்டவும்.
- வட்ட வடிவில் தட்டையான சப்பாத்தியாக பரத்தவும்.
- தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அது சூடானவுடன்,சப்பாத்தியை அதன் மேல் வைத்து இரண்டு பக்கமும் பழுப்பு நிறம் வரும் வரை சுட்டெடுக்கவும்.
- தேவைப்பட்டால் சப்பாத்தியில் பழுப்பு நிறம் வரும் பொழுது இருபுறமும் சிறிது எண்ணெய் / நெய் சேர்க்கலாம்.
மற்ற பெயர்கள் : Roti,Chapathi
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு