எலுமிச்சை சாதம்
வேலைக்கோ , ஸ்கூலுக்கோ, அல்லது காலேஜுக்கோ பேக் செய்து எடுத்து செல்லப்படும் சுவையான உணவு. வீட்டிலும் செய்து சாப்பிடலாம்.
Posted by
ShareRecipes Staff
29/01/2014
Click to rate this post!
[Total: 3 Average: 4.7]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 5 நிமிடங்கள்
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
kalavai satham, packed lunch, Rice, South Indian Vegetarian
தேவையான பொருட்கள் :
- சாதம் - 3 கப்
- எலுமிச்சை சாறு - 60 மில்லி
- எண்ணெய் - 2.5 டேபில் ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 2
- கடுகு - 1 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 7-8
முறை :
- வேக வைத்த சாதத்தை கிளறுவதற்கு வசதியாக ஒரு அகலமான பாத்திரத்தில் போடவும்.
- சிறிய சட்டி ஒன்றை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.
- அதில் சிறிதளவு எண்ணெய் விடவும்.
- எண்ணெய் சூடானவுடன் அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் மிளகாயை போடவும்.
- ஒரு நிமிடம் வறுபட்ட பின்னர் அதில் மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாற்றை கலக்கவும்.
- 2-3 நிமிடங்களுக்கு அல்லது எண்ணெய் விடும் வரை அதை கொதிக்க வைக்கவும்.
- பின்னர் இந்த கலவையை சாதத்தில் போட்டு நன்றாக கிளறவும்.
- எலுமிச்சை சாதம் சாப்பிட தயார்
குறிப்புகள் : சிவப்பு மிளகாய்க்கு பதிலாக பச்சை மிளகாயும் பயன்படுத்தலாம். இதற்கு உருளைக் கிழங்கு பொரியல் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.
மற்ற பெயர்கள் : lemon rice
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு