பீர்கங்காயுடன் இறால் சேர்த்து சமைக்கும் இந்த குழம்பை சாதத்திற்கு தொட்டு கொள்ளவோ அல்லது இட்லி, தோசை, மற்றும் ஆப்பத்திற்கு ஊத்திக் கொள்ளவோ செய்யலாம்.
Posted by
ShareRecipes Staff
22/05/2014
Click to rate this post!
[Total: 2 Average: 3.5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 10-15 நிமிடங்கள்
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»கூடுதல் உணவு»
குறிச்சொற்கள் :
chapati side dish, Marrow, Vegetable and prawn
பிரதான மூலப்பொருள் :
கடல்வாழ்வன காய்கறி
தேவையான பொருட்கள் :
- பீர்கங்காய் – 3
- ராஜ இறால் – 10-12 அல்லது முட்டை -1
- வெங்காயம் - 100 கிராம்
- பச்சை மிளகாய் – 1 (விரும்பினால்)
- தக்காளி – 1/2
- மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- அரைத்த சோம்பு – 1/2 தேக்கரண்டி
- பட்டை – 1 cm நீள துண்டு
- கருவேப்பிலை – சில (விரும்பினால்)
- எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
- டின் தேங்காய் பால் – 2 மேசைக்கரண்டி அல்லது
- 1௦௦ மில்லி வீட்டில் செய்த கெட்டியான தேங்காய் பால்
- உப்பு – சுவைக்கேற்ப
- தண்ணீர் – தேவைக்கேற்ப
முறை :
- வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்; பீர்கங்காயை உரித்து 2 cm துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்; ஒவ்வொரு துண்டையும் இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்; சோம்பை பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய்யை சூடாக்கவும்.
- பட்டை, கருவேப்பிலை, வெங்காயம், மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும்.
- தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
- நறுக்கிய காய்கறிகள் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
- உப்பு மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
- மிதமான சூட்டில் மூடி வைத்து, காய்கறிகள் வேகும் வரை சமைக்கவும்.
- காய்கறிகளை அவ்வப்போது கிளறவும். காய்கறிகள் வேக போதுமான அளவு தண்ணீர் உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளவும்.
- காய்கறிகள் வெந்தவுடன் முட்டை அல்லது இறால் சேர்க்கவும். முட்டை சேர்ப்பதாக இருந்தால், முட்டையை உடைத்து அடித்தபின் காய்கறியில் ஊற்றவும்.
- தேங்காய் பால், அரைத்த சோம்பை கடைசியில் சேர்த்து 3-4 நிமிடங்கள் கொதிக்க விடவும். வீட்டில் செய்த தேங்காய் பால் சேர்ப்பதாக இருந்தால், குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்
குறிப்புகள் : பீர்கங்காய் புகைப்படத்துக்கு கிளிக் செய்யவும். இது சாதம் மற்றும் சாம்பார், ரசம், பருப்பு, முட்டை புளிக் குழம்பு, முட்டை ஆம்லெட் புளிக் குழம்பு அல்லது பூண்டு குழம்பு ஆகியவற்றுடன் சாப்பிட ஏற்றது. மாறுதலுக்கு கோவக்காய் பொரியல், சுரைக்காய் இறால் குழம்பு, முருங்கைக்காய்-இறால் அல்லது பீன்ஸ் இறால் மசாலா ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை செய்து பார்க்கலாம்.
மற்ற பெயர்கள் : Peerkangai raal kuzhambu
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு