டின் டூனா கிடைத்தால் டோஸ்டட் டூனா சான்ட்விச்சை விரைவாக செய்து ருசியாக சாப்பிடலாம்.
Posted by
ShareRecipes Staff
19/03/2014
Click to rate this post!
[Total: 0 Average: 0]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 10-15 நிமிடங்கள்
செய்கிறது : 4 - 5
தேவையான பொருட்கள் :
- பிரட் துண்டுகள் - 8
- சமைத்து வடிகட்டிய டின் மீன் (டூனா ) - 225 கிராம்
- சிவப்பு வெங்காயம் – 1 சிறியது
- குடை மிளகாய் – 1/4 நடுத்தர அளவு
- சீஸ் (Cheddar cheese) - 75 கிராம்
- நுணுக்கிய மிளகு - 1/2 தேக்கரண்டி
- வெண்ணெய் அல்லது நெய் - 20 கிராம் அல்லது 1 மேசைக்கரண்டி
- மயோனைஸ் - 3 மேசைக்கரண்டி ( விரும்பினால் )
முறை :
- மீன் துண்டுகளை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
- வெங்காயம், குடை மிளகாயை நறுக்கிக்கொள்ளவும். சீஸைத் துருவிக்கொள்ளவும்.
- மீன் துண்டுகள், வெங்காயம், குடை மிளகாய், நுணுக்கிய மிளகு மற்றும் மயோனைஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.
- பிரடின் இரு புறமும் வெண்ணெய் தடவி கொள்ளவும். மீன் கலவையை ஒரு பிரட் துண்டு மீது வைத்து பரப்பவும்.
- அதன் மீது துருவிய சீஸை சேர்த்து அதை இன்னொரு பிரட் துண்டால் மூடவும்.
- மேல் கண்ட செய்முறையை அனைத்து பிரட் துண்டுகளுக்கும் பின்பற்றவும்.
- அவற்றை சான்ட்விச் டோஸ்டரில் 3-4 நிமிடங்கள் டோஸ்ட் செய்யவும்.
குறிப்புகள் : சீவிய வெள்ளரிக்காய் மற்றும் தக்காளியை கூட பிரட் துண்டுகளுக்கு நடுவே வைக்கலாம். காரமாக வேண்டுமென்றால். கீமா சான்ட்விச் மாதிரி மசாலா செய்து ப்ரெட் நடுவில் வைக்கலாம்.
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு