நவரத்தின பக்கோடா
நம் பஜ்ஜி மாதிரி சுவைக்கும் வட இந்திய பண்டமான இந்த நவரத்ன பகோராவை செய்து பார்க்கலாம்.
Posted by
ShareRecipes Staff
05/03/2014
Click to rate this post!
[Total: 1 Average: 5]
Please rate it
சமைக்கும் நேரம் : 30-45 நிமிடங்கள்
செய்கிறது : 25 - 30
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»பசி தூண்டி»
குறிச்சொற்கள் :
teatime snack
பிரதான மூலப்பொருள் :
காய்கறி பருப்பு / கடலை
செய்முறை வகை :
பட்சணம்
தேவையான பொருட்கள் :
- வெங்காயம் - 1 நடுத்தர அளவு
- சீவின இஞ்சி - 1 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 3 (தேவைப்பட்டால்)
- உருளை கிழங்கு - 1 நடுத்தர அளவு
- கேரட் - 1 சிறியது
- கத்தரிக்காய் - 3
- கீரை - 50 கிராம்
- அரிசி மாவு - 70 கிராம் அல்லது 1/2 கப்
- கடலை மாவு 210 கிராம் அல்லது 2 கப்
- சோடா மாவு - 1/8 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - 1 கொத்து
- நறுக்கிய கொத்தமல்லி இலை - 3 மேசைக்கரண்டி
- தயிர் - 3 மேசைக்கரண்டி
- சர்க்கரை - 1 தேக்கரண்டி
- ஆரஞ்சு கலர் - 1 சிட்டிகை (விரும்பினால்)
- எண்ணெய் - 250 மி.லி (வறுப்பதற்கு)
- தண்ணீர் - தேவையான அளவு
முறை :
- காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- இரண்டு மாவையும் சலித்துக் கொள்ளவும்.
- காய்கறி, அரிசி மாவு, கடலை மாவு, சோடா மாவு, சர்க்கரை, தயிர், மிளகாய் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை மற்றும் உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து பிசைந்து கொள்ளவும்.
- 10 நிமிடங்களுக்கு வைத்திருக்கவும்.
- கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் விடவும்.
- சிறிய அளவில் அதை தட்டை போல் தட்டி எண்ணெய்யில் மிதமான சூட்டில் பொரிக்கவும்.
குறிப்புகள் : கெட்சப் அல்லது ரைத்தா-வுடன் இது சுவையாக இருக்கும்.
ஒரு கப் என்பது 250மி.லி தண்ணீர் பிடிக்கும் அளவு கொண்டது
மற்ற பெயர்கள் : vegetable bhaji, Navarathna pakoda
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு