வெண்டிக்காய் பச்சடி
Click to rate this post!
[Total: 3 Average: 3.3]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 20-30 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 5-6
உணவு :
ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»கூடுதல் உணவு»
பிரதான மூலப்பொருள் :
காய்கறி
செய்முறை வகை :
மதிய உணவு விருந்து உணவு
தேவையான பொருட்கள் :
- வெண்டிக்காய் – 4௦௦ கிராம்
- வெங்காயம் – 1 நடுத்தர அளவு
- தக்காளி – 2
- பூண்டு – 3 பல்லு
- மிளகு – 1/2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- சீனி – 1 தேக்கரண்டி
- கருவேப்பிலை – சில
- வெள்ளை எள்ளு – 1 மேசைக்கரண்டி (விரும்பினால்)
- சூரியகாந்தி எண்ணெய் – 6௦ மில்லி
- புளி – 2 cm உருண்டை
- வெந்நீர் – தேவைக்கேற்ப
- உப்பு – சுவைக்கேற்ப
முறை :
- வெண்டிக்காயின் நுனியை நீக்கவும். காயை நறுக்கிக் கொள்ளவும்.
- வெங்காயம், தக்காளி, மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். எள்ளை தனியாக அரைத்துக் கொள்ளவும்.
- புளியை கழுவி வெந்நீரில் சில நிமிடங்கள் ஊற வைத்து, புளிச் சாறு எடுத்து தனியாக வைக்கவும்.
- எண்ணெயில் வெண்டிக்காயை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.
- அதே கடாயில் மீதமுள்ள எண்ணெயில் கருவேப்பிலை, மிளகு, பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, 4-5 நிமிடங்கள் கிளறவும்.
- புளிச் சாறு, 1/3 கப் தண்ணீர், சீனி மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- வறுத்த வெண்டிக்காயை சேர்த்து 4-5 நிமிடங்கள் கிளறவும்.
- வெண்டிக்காய் வெந்ததும், அரைத்த எள்ளை சேர்க்கவும்.
- கருவேப்பிலை கொண்டு அலங்கரிக்கவும்
குறிப்புகள் : மாறுதலுக்கு, வெண்டிக்காய் பச்சடி 2 அல்லது கத்திரிக்காய் பச்சடி செய்து பார்க்கலாம்.
மற்ற பெயர்கள் : vendikkai pachchadi,vendikkai patchadi
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு