வெண்டிக்காய் மசாலா இந்திய மசாலா வகைகளுடன் வெண்டைக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் துணை உணவாகும். இது சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ஏற்றது.
Posted by
ShareRecipes Staff
27/02/2014
Click to rate this post!
[Total: 2 Average: 2.5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 20-30 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 3-4
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
Bhindi, chapati side dish, Indian Vegetarian
தேவையான பொருட்கள் :
- வெண்டிக்காய் - 300 கிராம்
- வெங்காயம் - 250 கிராம் அல்லது 3
- தக்காளி - 250 கிராம் அல்லது 4
- பச்சை மிளகாய் - 1 (விரும்பினால்)
- பூண்டு - 1 பல்
- தக்காளி ப்யூரி(Puree) - 1 டீஸ்பூன்
- இஞ்சி-பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
- எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் இறுதியில் சேர்ப்பதற்கு
- தண்ணீர் - தேவையான அளவு
- உப்பு - சுவைக்கேற்ப
- கொத்தமல்லித் தழை - சிறிது
மசாலா பொடிகள்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1½ டீஸ்பூன் மிதமான காரத்திற்கு அல்லது 2 1/2 டீஸ்பூன் அதிக காரத்திற்கு
- கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
- கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
முறை :
- வெண்டிக்காய்களை கழுவி சுத்தமான துணியால் துடைத்து வைக்கவும்.
- ஒவ்வொரு வெண்டிக்காயையும் 2-3 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- கடாயை சூடு செய்து 3 டேபிள் ஸ்பூன் எண்ணெயை சேர்க்கவும்.
- அதில் வெண்டிக்காய் துண்டுகளை சேர்த்து 4-5 நிமிடங்களுக்கு வறுத்து அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பிறகு அதே எண்ணெயில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து 7-8 நிமிடங்களுக்கு, நன்கு சிவக்கும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மேலும் ஒரு நிமிடத்திற்கு வதக்கவும்.
- தக்காளி மற்றும் அனைத்து மசாலா பொடி வகைகளையும் சேர்த்து மேலும் 3-4 நிமிடங்களுக்கு வதக்கிக் கொள்ளவும்.
- வறுத்து வைத்துள்ள வெண்டிக்காய்களையும் , தக்காளி ப்யூரியையும் அதனுடன் சேர்த்து கிளறவும். கடாயை மூடாமல் மேலும் 4-5 நிமிடங்களுக்கு வதக்கிக் கொள்ளவும்.
- அதனுடன் 100 மிலி தண்ணீர் மற்றும் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, கொதிக்க ஆரம்பித்தவுடன், தீயை குறைத்து மூடி வைத்து மேலும் 5-6 நிமிடங்களுக்கு வேக விடவும்.
- தேவைப்பட்டால் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு